[X] Close

இதுதான் தோனி...: பேட்டிங் செய்யும்போது வங்கதேச அணிக்கு பீல்டிங் செட் செய்து கொடுத்து உதவி


  • kamadenu
  • Posted: 29 May, 2019 12:40 pm
  • அ+ அ-

கார்டிஃப் நகரில் நேற்று நடந்த வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர் தோனி,  பீல்டிங் செட்செய்ய அந்த அணியினருக்கு  உதவிய சம்பவம் நடந்துள்ளது.

உலகக் கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நாளை தொடங்குகின்றன. உலகக்கோப்பைப்போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

கார்டிஃப் நகரில் நேற்று இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்தது. அதைத் தொடர்ந்து ஆடிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

பொதுவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எதிரணி வீரர்களிடம் நட்பாகவும், சூழலை மிகவும் இனிமையாகவும் வைத்துக்கொள்ள ஆர்வமாக இருப்பார். ஐபிஎல் போட்டியில் கூடபோட்டி முடிந்தபின் எதிரணி வீரர்களுக்கு விக்கெட் கீப்பிங்கில் ஆலோசனைகள் அளிப்பது, கேப்டனுக்கு ஆலோசனை அளிப்பது என பாரபட்சம் பார்க்காமல் உதவிகளை செய்வார். இது அனைவராலும் பாராட்டப்படும்.

பீல்டிங் செட் செய்து கொடுத்த தோனி  

கார்டிஃபில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் 39 ஓவரை சபீர் ரஹ்மான் வீசினார். அப்போது, தோனி பேட்டிங் செய்தார். திடீரென பேட்டிங் செய்வதை நிறுத்திய தோனி, மிட்விக்கெட்டில் பீல்டரை நிறுத்தி இருகிறார்கள், ஸ்கொயர் லெக்கில் பீல்டர்களை நிறுத்துங்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினார்.

இதைக் கேட்ட சபீர் ரஹ்மான், உடனடியாக மிட்விக்கெட்டில் இருந்த  பீல்டரை, ஸ்கொயர் லெக்கிற்கு மாற்றினார்.

தான் பேட்டிங் செய்தபோதிலும் கூட, எதிரணியினர் பீல்டர்களை சரியாக நிறுத்தாமல் இருந்தபோது அவர்களுக்கு உதவிய தோனியின் செயல் பாராட்டப்பட்டு வருகிறது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close