[X] Close

42.5 கோடி பேஸ்புக் பதிவுகள்: ஐபிஎல் 2018ல் சாதனை


425-million-ipl-fb-posts

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 30 May, 2018 18:31 pm
  • அ+ அ-

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே, நடந்த முடிந்த ஐபிஎல் தொடரின் போதுதான் அதிகபட்ச பேஸ்புக் உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மொத்தம் 42.5 கோடி பதிவுகள் பேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளன. அதற்கான எதிர்வினைகள், பின்னூட்டங்கள் என கோடிக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்துரையாடியுள்ளனர். 

11-வது ஐபிஎல் தொடர் மே 27-ஆம் தேதி நிறைவடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து கோப்பையை வென்றது. 

சென்னை அணியின் கேப்டன் தோனி பற்றியே அதிகமான பதிவுகள் / உரையாடல்கள் பகிரப்பட்டுள்ளன. அணிகளில், சென்னை அணி பற்றியே அதிகப் பதிவுகள் இருந்துள்ளன, அடுத்த இடங்களில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் உள்ளன என்று பேஸ்புக் தனது வலைப்பூ பதிவில் தெரிவித்துள்ளது. 

தோனியைத் தவிர, ரெய்னா, விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா ஆகியோர் பற்றியும் அதிக பதிவுகள் பகிரப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 வெளியிடப்பட்ட ரிட்டர்ன் ஆஃப் தல மற்றும் விசில் போடு பாடல் தான் அதிகம் பேரால் விரும்பப்பட்ட பதிவாக இருக்கிறது.  

- ஐஏஎன்எஸ்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close