[X] Close

விராட் கோலி ஒரு 'ஸ்லோ பாய்ஸன்'; தோனி அப்படியல்ல: பேடி அப்டன் பேட்டி


  • kamadenu
  • Posted: 18 May, 2019 12:17 pm
  • அ+ அ-

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஸ்லோ பாய்ஸன் போன்றவர், தோனி மிகப்பெரிய வெற்றிகள் நிகழ காரணமாக இருப்பார் என்று பயிற்சியாளர் பேடி அப்டன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் உளவியல் பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் "தி பேர்ஃபூட் கோச்"( The Barefoot Coach)  என்ற தலைப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இருக்கும் சில விஷயங்களை அப்டன் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பேடி அப்டன், கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது அணியில் உளவியல் பயிற்சியாளராக இருந்தார். கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்.

இந்நிலையில், தி இந்து(ஆங்கிலம்)வுக்கு அளித்த பேட்டியில் பேடி அப்டன் கூறியதாவது:

2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியஅணியில் உங்களின் பங்கு என்ன?

எனக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டிருந்தன. முக்கியமாக வீரர்களின் மனநிலையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுகுறித்த பயிற்சி அளிப்பது பிரதானமாக இருந்தது. அணியில் உள்ள வீரர்கள் செயல்படுவதற்கான புதிய கலாச்சாரத்தை உருவாக்க நான் துணை செய்தேன் என்று நம்புகிறேன்.

கேப்டன் மூலமாகத்தான் கலாச்சாரம் உருவாக்கப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், மற்ற வீரர்களுடன் இணைந்தும், மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் ஆகியோருடன் பேசித்தான் இதை கொண்டுவந்தோம். மூத்த வீரர்களிடம் பேசுவதும், தவறு செய்தால் ஏதாவது சொல்வார்களோ என்ற கூச்சம் இளம் வீரர்களிடம் இருந்ததை உடைத்தோம். அனைவரும் எளிமையாக, சுந்திரமாக பேசும் வகையிலான கலாச்சாரத்தை உருவாக்கினோம். 15 வீரர்களுக்கும் பேச்சு சுதந்திரத்தை கொண்டுவந்தேன்.

2011-ம் ஆண்டில் இந்திய அணி எவ்வாறு இருந்தது?

அப்போது இருந்த இந்தியஅணி அற்புதமாக இருந்தது. 11 வீரர்களும் பல்வேறு விதங்களில் பங்களிப்பு செய்தார்கள்.வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், சச்சின், கோலி ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர். அணியின் கூட்டு வெற்றிக்கு 4 வீரர்களாவது சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அடிக்கடி கூறிவந்தோம்.

இந்த கால கட்டத்தில்தான் தோனி புகழின் உச்சிக்குச் சென்றார். 11 வீரர்களில் எந்த 4 வீரர்கள் வேண்டுமானாலும் சிறப்பாகச் செயல்பட திட்டம் வகுத்தோம். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோனியின் பங்களிப்பு உண்மையில் மகத்தானது. சரியான நேரத்தில் தனது இருப்பை வெளிப்படுத்தினார். மிகப்பெரிய வெற்றிகளின் பின்னணியில் தோனி காரணமாக இருப்பார்.

Dhoni strikes.jpg 

மற்ற கேப்டன்களிடம் இருந்து தோனி எவ்வாறு வேறுபடுகிறார்?

தோனியின் அமைதி, சுய கட்டுப்பாடு, தெளிவு ஆகியவற்றால் மற்ற வீரர்கள் மீது எளிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார்.  மற்றவீரர்களையும் அமைதிப்படுத்தி, கட்டுப்படுத்தக்கூடியவர். தோனி களத்தில் வந்துவிட்டால், மற்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் ரிலாக்ஸாக நடந்து கொள்வார்கள். அதிலும் அதிக அழுத்தம் நேரத்தில் தோனி அருமையாக கையாண்டு வெற்றிக்கு வழிகாட்டுவார்.

இளம் வீரராக இருந்து கோலி வெற்றிகரமான கேப்டனாக, பேட்ஸ்மேனாக உயர்ந்ததை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

Virat Kohli.jpg 

விராட் கோலி ஏராளமாக கற்றுக்கொண்டு, புரிந்து கொண்டு தேவைக்கு ஏற்றார்போல் அதை பேட்டிங்கில் செயல்படுத்தினார். தன்னிடம் பேட்டிங் திறமை இருக்கிறது, களத்தில் நின்று விளையாட முடியும் என்பதை அறிந்துகொண்டார் கோலி.

தோனி இந்த விஷயங்களைபுரிந்து கொள்ள நீண்டகாலம் ஆனது, சிலநேரங்களில் பின்தங்கி, கடைசிநேரத்தில் அணியை வெற்றிக்கு கொண்டுசென்று விடுவார். ஆனால், கோலி களத்தில் நிற்க வாய்ப்பளித்துவிட்டால் 'ஸ்லோ பாய்ஸன்' போன்றவர்.

ஒவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டாலும் அதில் இருந்து பின்தங்கமாட்டார். எதிரணிகளுக்கு வாய்ப்பை தராமல் செயல்படக்கூடியவர் கோலி. போட்டியின் கடைசியில் வெற்றியை அடைந்துவிட்டுத்தான் வெளியே வருவார். போட்டியை புரிந்து கொண்டுவிளையாடி வருவதால்தான் கோலி இன்னும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

உலகக் கோப்பையை எந்த அணி வெல்ல வாய்ப்பு இருக்கிறது?

என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. நம்பர் ஒன் அணியாக இருக்கும் இங்கிலாந்து அணிக்கு சொந்தமைதானம் என்பது கூடுதல் பலம். சரிவிகித கலப்பில் இங்கிலாந்து அணி இருக்கிறது, அனுபவமான வீரர்கள், சிறந்த பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறது. நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். கோலி, தோனி போன்ற மேட்ச் வின்னர்கள் இருப்பது எந்த நேரத்திலும் முடிவை மாற்றிவிடுவார்கள்.

மூன்றாவதாக ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அல்லது நியூசிலாந்து அணியைக் கூறலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close