[X] Close

சச்சின் டெண்டுல்கரை நட்பு ரீதியாகக் கலாய்த்த ஐசிசி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 20:56 pm
  • அ+ அ-

ஆயிரம் கிரிக்கெட் வீரர்கள் வந்தாலும் சச்சின் போல் வருமா என்று அவரது ரசிகர்கள் பலர் கூறுவதை நாம் கேட்டிருக்கலாம், கிரிக்கெட்டை அதன் அத்தனை மரியாதையுடனும் நேயத்துடனும் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர்.

 

தன் பால்ய நண்பன் விநோத் காம்ப்ளியுடன் சமீபத்தில் டெண்டுல்கர்-மிடில்செக்ஸ் குளோபல் அகாதெமியில் நவி மும்பையில் வலையில் ஆடினார். சிலபல லெக்ஸ்பின் பந்துகளை அவர் விநோத் காம்ப்ளிக்கு வீசினார்.

 

அது குறித்து அவர் தன் ட்விட்டரில், “விநோத் காம்ப்ளியுடன் மீண்டும் வலையில் ஆடியது மிகப்பிரமாதம். சிவாஜி பார்க்கில் நாங்கள் ஆடிய அந்தக் கால நினைவுகளை மனதில் கொண்டு வந்தது. நானும் விநோதும் ஒரே அணியில்தான் இருந்தோம், ஒருவரையொருவர் எதிர்த்து ஆடியது கிடையாது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். ” என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருந்தார்.

 

வலையில் பந்து வீசிய சச்சின் பவுலர் கிரீசைத் தாண்டி காலை வைத்து நோ-பால் வீசினார், இதனை நட்பு ரீதியாகக் கேலி செய்த ஐசிசி தன் ட்விட்டரில் சச்சின் நோ-பாலையும் ஸ்டீவ் பக்னர் நோ-பால் கொடுப்பது போன்ற படத்தையும் அருகருகே வைத்து, உங்கள் முன் காலை கவனிக்கவும் சச்சின் என்று லேசாக கேலி செய்திருந்தது.

 

ஸ்டீவ் பக்னர் என்ற மே.இ.தீவுகள் நடுவர் சச்சின் டெண்டுல்கருக்கு சிலபல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியதில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐசிசியின் இந்த கலாய்ப்பு ட்வீட்டுக்குப் சச்சினும் விளையாட்டாக, “குறைந்தது நான் இப்போது பவுலிங்கில் இருந்தேன், நல்ல வேளையாக பேட்டிங்கில் இல்லை” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close