[X] Close

வரலாறு படைத்த இர்பான் பதான்: முதல்முறையாக வெளிநாட்டு தனியார் லீக்கில் விளையாட தேர்வு


  • kamadenu
  • Posted: 16 May, 2019 20:50 pm
  • அ+ அ-

-ஏ.என்.ஐ.

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதற்கு முன் எந்த இந்திய வீரரும் வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை. முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கிரீபியன் கிரிக்கெட் லீக்(சிபிஎல்) லீக்கில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான அறிவிப்பு கரீபியன் லீக் கிரிக்கெட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த லீக்கில் விளையாடுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அமைப்பிடம் பதான் தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை.

கரீபியன் கிரிக்கெட் லீக் போட்டித் தொடர் மேற்கிந்தியத்தீவுகளில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இர்பான் பதான் பெயரும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 6 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும் நிலையில், எந்த அணியில் பதான் இடம் பெறுவார் என்பது இனிமேல்தான் தெரியும்.

கரீபியன் லீக் கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் ஹால் கூறுகையில், " எங்கள் லீக்கில் இடம் பெறுவதற்காக ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருந்தார்கள். கரீபியன் மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும், உயர்தரமான கிரிக்கெட்டை வழங்கும் என்பதால் வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு லீக்கை வித்தியாசமாக நடத்த விரும்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

CricfitIrfanPathan.jpg 

இந்த கரீபியன் லீக் தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், தென் ஆப்பிரிக்க வீரர் டுமினி, வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், மெக்கல்லம், உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள்  இருக்கின்றனர்.

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு ஆண்டுகளாக விளையாடமல் இருந்த பதான் முதல்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாட உள்ளார். இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள பதான் 300 விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார், 2,800 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் ஹாட்ரிக் எடுத்துள்ளார்  பதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை சிஎஸ்கே, டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், புனே சூப்பர் ஜெயின்ஸ்ட், சன்ரைசர்ஸ் அணி ஆகியவற்றில் பதான் விளையாடியுள்ளார். பராடோ மாநிலத்துக்காக விளையாடி வந்த பதான் அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக விளையாடி, அங்குள்ள மாநிலஅணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close