[X] Close

அடுத்த ஆண்டு மீண்டும் வலிமையாக வருவோம்; விசில் போடு: சிஎஸ்கே ரசிகர்களுக்கு வாட்ஸன் நன்றி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 12:53 pm
  • அ+ அ-

தனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. அடுத்த ஆண்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலிமையாக வரும் என்று அந்த அணியின் வீரர் ஷேன் வாட்ஸன் ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

காலில் அடிபட்டதுடன் மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி, சிஎஸ்கே அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ஷேன் வாட்ஸனுக்கு ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் வாழ்த்தையும், அன்பையும் சமூக வலைதளங்களில் பொழிந்து வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த அன்பு மழையால் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வாட்ஸன் டிரெண்டிங்கில் இருந்தார்.

இந்நிலையில் தனக்கு ஆதரவளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு வாட்ஸன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாட்ஸன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ''கடந்த சில நாட்களாக எனக்கு அன்பையும் ஆதரவையும், வாழ்த்தையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  நாம் மும்பைக்கு எதிராக வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டோம். இருப்பினும் இது அற்புதமான இறுதிப் போட்டி. அடுத்த ஆண்டு போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன். அடுத்த வருடம் நாம் வலிமையாக மீண்டும் வருவோம்.

மீண்டும் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. விசில் போடு'' என்று தெரிவித்துள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close