[X] Close

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:28 am
  • அ+ அ-

இந்திய கால்பந்து ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் குரோஷிய வீரர் இகோர் ஸ்டிமாக்கை நியமித்துள்ள அகில இந்திய கால்பந்து சம்மேளனம். தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்டீபன் கான்ஸ்டன்டைனின் இருவருட கால ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமிக்கப்பட்டுள்ளார். இகோர் ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் விளையாடிய குரோஷிய அணி கடந்த 2014-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றிருந்தது. கடைசியாக அவர், கத்தாரைச் சேர்ந்த அல்-ஷகானியா அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.

கடந்த 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பையில் கலந்து கொண்ட குரோஷிய அணியில் இகோர் ஸ்டிமாக் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் குரோஷிய அணி 3-வது இடம் பெற்றிருந்தது. மேலும் 1996-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பின்ஷிப் தொடரில் கால் இறுதி வரை கால் பதித்திருந்த குரோஷிய அணியிலும் இகோர் ஸ்டிமாக் விளையாடியிருந்தார்.

இவை தவிர 1987-ம் ஆண்டு சிலியில் நடைபெற்ற பிபா 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற யுகோஸ்லாவியா அணியிலும் இகோர் ஸ்டிமாக் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

51 வயதான, இகோர் ஸ்டிமாக் பயிற்சியின் கீழ் இந்திய கால்பந்து அணி வரும் ஜூன் மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close