[X] Close
 

ஐபிஎல் வெற்றியை அவெஞ்சர்ஸ் மீம் போட்டுக் கொண்டாடிய சிஎஸ்கே ரசிகர்கள்


avengers-memes

  • பாரதி
  • Posted: 28 May, 2018 10:46 am
  • அ+ அ-

ஐபிஎல் 2018 இறுதியில் சிஎஸ்கே வென்றதை அதன் ரசிகர்கள் அவெஞ்சர்ஸ் மீம்ஸ் போட்டு கொண்டாடினர். 
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐபிஎல் சாம்பியனாகி கோப்பையைத் தட்டிச் சென்றது.

டாஸ் வென்று முதலில் சன் ரைசர்ஸ் அணியை பேட் செய்ய அழைத்தார் தோனி, அந்த அணியில் ஒருவரும் அரைசதம் எடுக்கவில்லை, கேன் வில்லியம்சன் (47) விக்கெட்டை கரன் ஷர்மா வீழ்த்தியது திருப்பு முனையாக அமைய 178 ரன்களை எடுத்தது சன் ரைசர்ஸ், இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.3 ஓவர்களில் 181/2 என்று சன் ரைசர்ஸை ஊதித்தள்ளியது.

இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் விதவிதமாக மீம்ஸ் போட்டு கொண்டாடினர். அதில் அவெஞ்சர்ஸ் மீம்ஸ் பரவலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம். மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப் பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக வெளியானது.

இந்தப் படத்தின் சூப்பர்ஹீரோவைப் போல் தோனியை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close