[X] Close

இதுதான் வாட்ஸன்: யாரிடமும் சொல்லவில்லை...காலில் ரத்தம், களத்தில் போராட்டம்; சிஎஸ்கே ரசிகர்கள் பாராட்டு மழை


  • kamadenu
  • Posted: 14 May, 2019 10:18 am
  • அ+ அ-

-Vilangiah

12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் தோற்றபோதிலும், அந்த அணி வீரர் ஷேன் வாட்ஸன் செயல் இன்று நெட்டிசன்கள் மத்தியிலும், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் புகழப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் 12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் பறிபோன நிலையிலும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்கார் ஷேன் வாட்ஸன் நிலைத்து நின்று பேட் செய்தார். 59 பந்துகளில் 80 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அவர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஆட்டத்தை பரபரப்பான கட்டத்துக்கு நகர்த்தின.

watson.PNG 

ஆனால், ஷேன் வாட்ஸன் எந்த சூழலில் அணிக்காக விளையாடினார் என்பதை சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், வாட்ஸன் முழங்காலில் ரத்தத்துடன் பேட் செய்த காட்சிக்கான புகைப்படத்தையும் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.

அதில், " ஷேன் வாட்ஸன் ரன் அவுட் செய்யப்படும் போது தாவியதால், முழங்காலில் காயம் ஏற்பட்டது.

அந்தக் காயத்தால் வாட்ஸனின் முழங்காலில் ரத்தம் சொட்டியது. அந்தக் காயத்தையும் பொருட்படுத்தாமல், முதலுதவி கூட எடுத்துக்கொள்ளாமல் வாட்ஸன் விளையாடியுள்ளார். வாட்ஸன் ஆட்டமிழந்து வந்தபின் அவருக்கு இடது முழங்காலில் 6 தையல்கள் போடப்பட்டன"  என்று மிகவும் உருக்கமாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

wat.PNG 

 

வாட்ஸன் குறித்து ஹர்பஜன் சிங்கின் பதிவைப் பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்களும் புகழ்ந்து, பாராட்டி வருகின்றனர்.

twi.PNG

ww.PNG 

" என்ன அருமையான ஆட்டம், அர்ப்பணிப்பான பேட்டிங். 6 தையல்கள் போடும் அளவுக்கு காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையிலும் அணிக்காக பேட் செய்த வாட்ஸனின் செயல் பாராட்டுக்குரியது" என பாராட்டியுள்ளனர்.

" கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் எவ்வாறு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு வாட்ஸன் உதாரணம்" என்றும் புகழ்ந்துள்ளனர்.

tt.PNG 

 " இறுதிப் போட்டியில் சிஎஸ்கே தோற்றது வருத்தம் அளித்தது. ஆனால், இப்போது வாட்ஸன் ரத்தக்காயத்துடன் பேட்டிங் செய்த புகைப்படத்தைப் பார்த்தபோது கோப்பை ஒரு பொருட்டு இல்லை. என்ன மாதிரியான வீரர்" என்று சிலர் புகழ்ந்துள்ளனர்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close