[X] Close

ஐபிஎல் 2019 விருது பட்டியல்


2019

  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:17 am
  • அ+ அ-

ஆட்டநாயகன்: சென்னை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 14 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நேர்மை விருது: களத்தில் எதிரணி வீரர்களுடன் நட்புறவு டன் பழகுவது, நடுவரின் முடிவை மதிப்பது, குறித்த நேரத்தில் போட்டியை முடிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் கீழ் நேர் மையான அணியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த மைதானம்: மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக் கெட் மைதானம் ஆகியவற் றுக்கு சிறந்த மைதான பராமரிப்புக்கான விருது வழங்கப்பட்டது. இந்த இரு மைதானங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.

இளம் வீரர்:வளர்ந்து வரும் வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில் இவரது ஸ்டிரைக் ரேட் 124.30 ஆகும். 19 வயதான கில் 3 அரை சதங்கள் உட்பட 296 ரன்கள் சேர்த்திருந்தார்.

மதிப்பு மிக்க வீரர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு மதிப்பு மிக்க வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த சீசனில் ரஸ்ஸல் 510 ரன்கள் குவித்து, 204 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும்.

சிறந்த கேட்ச்: மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட்டுக்கு சிறந்த கேட்ச் செய்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா அடித்த ஷாட்டை எல்லைக் கோட்டுக்கு அருகே துள்ளியவாறு கேட்ச் செய்து பிரமிக்க வைத்திருந்தார் பொலார்டு.

அதிவேக அரை சதம்: அதிவேகமாக அரை சதம் அடித்த வீரராக மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் ஹர்திக் பாண்டியா அரை சதம் அடித்திருந்தார்.

அதிக விக்கெட்டுகள்: அதிக விக்கெட்கள் கைப்பற்றிவர்களுக்கான ஊதா நிறத் தொப்பியை சிஎஸ்கே வீரர் இம்ரன் தகிர் பெற்றார். அவர், 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ரன் வேட்டை: அதிக ரன்கள் குவித்த வீரருக்கான விருதை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் டேவிட்வார்னர் பெற்றார். அவரது சார்பில் அணி யின் ஆலோசகரான விவிஎஸ் லட்சுமண் இந்த விருதை பெற்றுக்கொண்டார். வார்னர் 12 ஆட்டங்களில் 692 ரன்கள் சேர்த்திருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close