[X] Close

3-வது முறையாக உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழக்கிறார் முகமது அமீர்


3

  • kamadenu
  • Posted: 13 May, 2019 21:41 pm
  • அ+ அ-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டார் எனத் தெரிகிறது.

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடக்கும் உலகக்கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதில் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் இடம் பெறவில்லை. இருந்தாலும், இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முகமது அமீர் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்தத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசினால் அமீர் பெயர் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், சவுத்தாம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் விளையாடவில்லை. அதுகுறித்து பாகிஸ்தான் அணி தரப்பில் விசாரித்தபோது, அமீருக்கு சின்னம்மை நோய் தாக்கி இருப்பதாகத் தெரியவந்தது.

இதனால், நாளை பிரிஸ்டலில் நடக்கும் போட்டியிலும் அமீர் பங்கேற்கமாட்டார். தற்போது குடும்பத்துடன் லண்டனில் தங்கி இருக்கும் அமீர், அங்கிருந்து பாகிஸ்தான் செல்ல உள்ளார்.  

பாகிஸ்தான் உலகக் கோப்பைக்கான அணியில் அமீர் இடம் பெறாவிட்டாலும், இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால், சின்னம்மை நோய் குணமாக அமீருக்கு ஒரு மாதம் ஆகும் என்பதால், அவரால் அணிக்கு இப்போதுள்ள நிலையில் திரும்புவது கடினம். ஆதலால் உலகக்கோப்பை வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டார் என்றே தெரிகிறது.

ஒருவேளை இந்த உலகக்கோப்பை போட்டியில் அமீர் இடம் பெறாமல் போனால், உலகக்கோப்பை போட்டியை மூன்றாவது முறையாக அமீர் இழக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இடம் பெறும் வாய்ப்பை அமீர் இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close