[X] Close

2019 ஐபிஎல்: வாங்கிய விலைக்கு 'வொர்த்' இல்லாத வீரர்கள், 'பெஸ்ட்' வீரர்கள் யார்?


2019

  • kamadenu
  • Posted: 13 May, 2019 18:47 pm
  • அ+ அ-

12-வது ஐபிஎல் சீசனில் 8 அணி நிர்வாகங்கள் சார்பில் கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கிய வீரர்களின் சூப்பர் செயல்பாடு, மோசமான செயல்பாடு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனும் நோக்கில் அதிக விலை கொடுத்து வெளிநாட்டு வீரர்களையும் உள்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களையும் விலைக்கு வாங்கின. ஆனால், இதில் பலர்  எதிர்பார்த்த அளவுக்கு விளையாடுவதில்லை, அதேசமயம், குறைந்தவிலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் நன்றாக பேட் செய்து வியக்க வைத்துள்ளார்கள். அந்த வகையில் வீரர்களை கிரிக் இன்போ தளம் பட்டியலிட்டுள்ளது.  

குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட தகுதியான வீரர்கள்

ஜானி பேர்ஸ்டோ(சன்ரைசர்ஸ் ஹைதராபாத், விலை ரூ.2.2 கோடி)

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை சன் ரைசர்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு விலைக்கு வாங்கியது. 10 போட்டிகளில் விளையாடிய பேர்ஸ்டோ 445 ரன்கள் குவித்தார். சராசரியாக 55.62 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 157.24 ஆக வைத்திருந்தார். விக்கெட் கீப்பிங் பணி செய்த பேர்ஸ்டோ 9 கேட்ச்சுகளையும் 2 ஸ்டெம்ப்பிங்கையும் செய்துள்ளார். பேர்ஸ்டோ ரூ.2.2 கோடிக்கு விலைகொடுத்து வாங்கியது சரிதான் என்பதை அவர் தனது திறமையால் நிரூபித்துவிட்டார்.

இந்த சீசனில் ரஸல் (204), ஹர்திக் பாண்டியா (191), ரிஷப் பந்த் (162) ஆகியோர் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு அடுத்து 157 ஸ்ட்ரைக் ரேட்டை பேர்ஸ்டோ வைத்துள்ளார். வார்னரும், பேர்ஸ்டோவும் தொடக்க வீரர்களாக களமிறங்கி இந்த சீசனில் 791 ரன்கள் குவித்துள்ளனர்.

இசாந்த் சர்மா(டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.1.10 கோடி)

ishant-sharma_.jpg 

2018-ம் ஆண்டு சீசனில் எந்த அணியும் இசாந்த் சர்மாவை விலைக்கு வாங்காத நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் ரூ.1.10 கோடி கொடுத்து சர்மாவை விலைக்கு வாங்கியது. பவர் ப்ளே ஓவர்களில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்ட சர்மா 8 விக்கெட்டுகளையும், ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ரபாடாவுடன் இணைந்து கடைசி நேர ஓவர்களை வீசுவதற்கு இசாந்த் சர்மா நன்கு பயன்பட்டார்.

கீமோ பால்(டெல்லி கேபிடல்ஸ் ரூ.50 லட்சம்)

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் ரூ.50 லட்சத்துக்கு தென் ஆப்பிரிக்க வீரர் கீமோ பால் வாங்கப்பட்டார். அமித் மிஸ்ரா, அக்சர் படேல் ஆகியோருடன் இணைந்து கீமோ பால் சிறப்பாகப் பந்து வீசினார். 2-வது தகுதிச்சுற்றுக்கு முன்பாக, கீமோ பால் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எலிமினேட்டர் சுற்றில் கடைசிநேரத்தில் பவுண்டரி அடித்து கீமோ பால் வெற்றியைத் தேடித்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ், ரூ.20 லட்சம்)

parag.jpg 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ரூ.20 லட்சத்துக்கு ரியான் பராக் வாங்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். 17 வயதான ரியான் பராக்கிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஸ்மித்கூட பாராட்டினார். கொல்கத்தா அணிக்கு எதிராக 47 ரன்கள், டெல்லி அணிக்கு எதிராக அரை சதம் ஆகியவை பராக்கின் திறமைக்குச் சான்றாக அமைந்தன. பந்துவீச்சிலும் எந்தவிதமான அச்சமின்றி வீசி 7 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை பராக் வீழ்த்தினார்.

முருகன் அஸ்வின்(கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.20 லட்சம்)

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். 10 ஆட்டங்களில் 5 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி, முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அஸ்வின் அணிக்குத் தூணாக விளங்கினார். பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் வகையில் பந்து வீசி பஞ்சாப் அணியில் குறைந்த ரன் வழங்கிய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இவர்கள் அனைவரும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டாலும் அணிக்கு லாபம் தரக்கூடிய வகையில் செயல்பட்டனர்.

Murugan-Ashwin-.jpg 

உயர்ந்த விலைகொடுத்தும் வீண்

ஜெயதேவ் உனத்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.8.4 கோடி)

unadkat-1.jpg 

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் உனத்கட்டை ஏன் இந்த விலைகொடுத்து வாங்கினார்கள் எனத் தெரியவில்லை. 11 போட்டிகளில் பங்கேற்று 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரியாக ஓவருக்கு 10 ரன்களை வாரி வழங்கும் பந்துவீச்சாளர். இவரின் அடிப்படை விலை ரூ.1.50 கோடியாக இருந்தாலும், அதைக்காட்டிலும் 5 மடங்கு விலையில் வாங்கப்படுவது ஏன் எனத் தெரியவில்லை. கடந்த சீசனிலும் மோசமாக ஆடிய உனத்கட் இந்த சீசனிலும் எந்த மாற்றமும் இல்லாமல் செயல்பட்டார்.ரூ.8.4கோடிக்கு வாங்கப்பட்ட போதிலும் அணியின் நிர்வாகத்துக்கு உனத்கட்டால் எதிர்பார்த்த அளவுக்கு எந்தவிதமான பலனும் இல்லை.

வருண் சக்கரவர்த்தி (கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.8.4 கோடி)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரு போட்டியில் மட்டுமே பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சக்கரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக இருந்த நிலையில், அதைக்காட்டிலும் 42 மடங்கு அதிகமான விலைக்கு வாங்கியும் காயம் காரணமாக விலகினார்.

கோலின் இங்ராம்(டெல்லி கேபிடல்ஸ் ரூ.6.4 கோடி)

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் ரூ.6.4 கோடிக்கு வாங்கப்பட்ட கோலின் இங்ராம் 12 போட்டிகளில் 184 ரன்கள் சேர்த்தார். சிறந்த தொடக்க வீரராக இருப்பார் என்று நம்பி வாங்கப்பட்ட நிலையில், 5-வது வீரராகவே களமிறங்கினார் இங்ராம். இதனால், இந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இங்ராம் பேட் செய்யத் தவறினார்.

ஷிவம் துபே (ஆர்சிபி, ரூ.5 கோடி)

dube.jpg 

ஆர்சிபி அணியால் ரூ.5 கோடிக்கு ஷிவம் துபே வாங்கப்பட்டார். சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்ட வீரர் என்று நம்பப்பட்ட துபே 4 போட்டிகளில் 40 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றினார். பந்துவீச்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. 4 போட்டிகளில் விளையாடியும் டெல்லி அணிக்கு எதிராக 24 ரன்கள் சேர்த்ததே துபேயின் அதிகபட்சமாக அமைந்தது.

பிரப்சிம்ரன் சிங்(கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.4.8 கோடி)

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரப்சிம்ரன் சிங், ரூ.4.8 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்ற  சிம்ரன்சிங் ஆசியக்கோப்பை பைனலில் இலங்கைக்கு எதிராக 65 ரன்கள் சேர்த்தார்.

சயத் முஷ்டாக் அலி கோப்பையில் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார் சிம்ரன் சிங். இதனால், இவர் மீது மிகவும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில், 16 ரன்கள் மட்டுமே சிம்ரன் சிங் சேர்த்தார். ரூ.4.80 கோடிக்கு வாங்கியும் அதிகமான போட்டியில் அவர் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close