[X] Close

வாழ்த்துகள் சிஎஸ்கே; ஒரு ரன்னில் தோற்பதில் எந்த அவமானமும் இல்லை: ஸ்காட் ஸ்டைரிஸ்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 17:10 pm
  • அ+ அ-

வாழ்த்துகள் சிஎஸ்கே. இறுதிப் போட்டியில் ஒரு ரன்னில் தோற்பது அவமானமில்லை என்று நியூஸிலாந்து முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஸ்டாக் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடத்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து மும்பை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் சிஎஸ்கேவின் தோல்வி குறித்து அந்த அணியின் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''வாழ்த்துகள் சிஎஸ்கே... இந்த வருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். இறுதிப் போட்டியில் ஒரு ரன்னில் தோற்பது அவமானமில்லை'' என்று பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close