[X] Close

'உங்களை நீக்கியது சரிதான்': சிஎஸ்கேவை கிண்டல் செய்த அஸ்வினை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 15:26 pm
  • அ+ அ-

12-வது ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் அடைந்த தோல்வியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திர அஸ்வின், சிஎஸ்கே அணியில்தான் கடந்த 2015-ம் ஆண்டுவரை இடம் பெற்றிருந்தார். ஆனால், சூதாட்டப் புகார் தொடர்பாக சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு 2018-ம் ஆண்டில் மீண்டும் அடியெடுத்து வைத்தது.

அப்போது வழக்கம் போல் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் கழற்றி விடப்பட்டார். அவருக்குப் பதிலாக ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும், தோனி தலைமையிலான சிஎஸ்கேவுக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடந்த போதெல்லாம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வதுண்டு.

இந்நிலையில், 12-வது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன்னில் தோல்வி அடைந்து சிஎஸ்கே அணி கோப்பையைத் தவறவிட்டது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தபோதிலும் கூட, முன்னாள் வீரர்கள், திரை நடிகர்கள், நடிகைகள், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ashwin.PNG 

ஆனால், சிஎஸ்கே தோல்வி, மும்பையின் வெற்றியை ரவிச்சந்திர அஸ்வின் மறைமுகமாகக் கிண்டல் செய்து நேற்று இரவு ட்விட்டரில் கருத்து பதிவிட்டது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்லது. அந்த ட்விட்டரில் எமோஜிகான் பொம்மைகளா கிண்டல் செய்வதையும், சிரிப்பதையும் அஸ்வின் பயன்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கேயின் துரதிர்ஷ்டம் பாவம் என்றும் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பதிவில், " ஓஓ..... கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆட்டம். சிறப்பாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ், ரோஹித் சர்மா. ஐபிஎல் 2019-ம் ஆண்டில் சிஎஸ்கேவும், தோனியும் பாவம் துரதிர்ஷ்டம் பிடித்துக்கொண்டது" எனத் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி மீது அஸ்வினுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி, கோபத்தை அவர் தனது ட்வீட்டில் வெளிக்காட்டிவிட்டார் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஒரு அணி தோல்வி அடைந்தாலும், மற்றொரு அணியின் கேப்டன் அந்த அணியின் செயல்பாட்டைப் பாராட்ட வேண்டுமே தவிர எள்ளி நகையாடி, பகடி செய்வது சரியான தலைமைக்கு உகந்தது அல்ல. அஸ்வினின் ட்வீட்டும், அவர் பதிவிட்டுள்ள எமோஜிகான் பொம்மைகளும் எதை உணர்த்துகின்றன என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

twittt.PNG 

"அஸ்வினின் இதுபோன்ற செயலால்தான் சிஎஸ்கே அணியில் இருந்தும், இந்திய அணியில் இருந்தும் துரத்தப்பட்டார்" என்று சிலர் தெரிவித்துள்ளார்கள். "சிஎஸ்கே அணியை விமர்சிக்க அஸ்வினுக்குத் தகுதியில்லை, அஸ்வின் நிம்மதியாகத் தூங்கலாம்" என்றும் சில தெரிவித்துள்ளனர்.

" உங்களிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை எதிர்பார்ததோம் அஸ்வின். வந்துவிட்டது நீங்கள் பேசியது அதிகபட்சம்" என்று சிலர் கண்டித்துள்ளனர்.

tt.PNG 

" இந்த ஐபிஎல் சீசன் அஸ்வினுடைய ஏமாற்றுத்தனத்தை எப்போதும் ரசிகர்களுக்கு நினைவூட்டுவதாக அமையும்" என்றும் சிலர் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close