[X] Close

மும்பையைக் கொண்டாடுவதை சற்று நிறுத்திவிட்டு சென்னையின் சிறப்பான சீசனைப் பாராட்டுங்கள்: ஹர்ஷா போக்ளே


  • kamadenu
  • Posted: 13 May, 2019 14:40 pm
  • அ+ அ-

மும்பையைக் கொண்டாடுவதை சற்று நிறுத்திவிட்டு இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கேவைப் பாராட்டியே ஆக வேண்டும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடத்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து மும்பை ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்தனர்.

மேலும், மும்பை அணிக்கு ஆதரவாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் கருத்து கூறிய சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு எதிராகப் ரசிகர்கள் பலர் எதிராக பதிவிட்டனர்.

இதற்கிடையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''எப்போதும் வெற்றி பெற்றவர்களை இந்த நேரத்தில் கொண்டாடுவோம். ஆனால் அதனைச் சிறிது நிறுத்திவிட்டு  இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடிய சிஸ்கேவை நீங்கள் பாராட்டி ஆக வேண்டும்'' என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close