[X] Close

டாஸ்  வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி: பிட்ச் ரிப்போர்ட் யாருக்கு சாதகம்?


  • kamadenu
  • Posted: 12 May, 2019 19:30 pm
  • அ+ அ-

 

ஹைதராபாத்தில்  இன்று நடக்கும் 12-வது ஐபிஎல் போட்டியின் இறுதிஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

12-வது ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஹைதராபாத்தில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் இதுவரை 3 முறை சிஎஸ்கே அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்துள்ளது.

ஆதலால், 4-வது முறையாக வென்று கோப்பையை 4-வது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெல்லுமா என்ற  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்எழுந்துள்ளது. அதேபோல, சிஎஸ்கே அணி கோப்பையை தக்கவைக்குமா  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெக்லனஹனுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

பிட்ச் ரிப்போர்ட்:

ஆடுகளத்தைப் பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு முற்றிலும் சாதகமானதாகும். ஆடுகளம் கடினமானதாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் நம்பி விளையாடலாம். பந்துகள் வேகமாக பேட்டை நோக்கி வரும் என்பதால் அடித்து ஆடுவது எளிது. முதலில் பேட் செய்யும் அணி நல்ல ஸ்கோரை செய்ய முடியும். சேஸிங்கின் போது, சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும் என்பதால், சேஸிங்கில் கவனத்துடன் ஆட வேண்டும். ஆடுகளத்தில் பவுண்டரி அடிப்பது கடினம் என்பதால், ஒரு ரன், 2 ரன்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளிப்பது ஸ்கோரை உயர்த்த உதவும். மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பதால், சேஸிங் செய்வது சிஎஸ்கே சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close