[X] Close

சிஎஸ்கே அணியை எளிதாக எப்படி வீழ்த்தலாம்?- மும்பை அணிக்கு 8 டிப்ஸ் கொடுத்த ரசிகர்


8

  • kamadenu
  • Posted: 12 May, 2019 19:19 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

ஹைதராபாத்தில்  இன்று நடக்கும் 12-வது ஐபிஎல் போட்டியின் இறுதிஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எளிதாக வீழ்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகர் ஒருவர் 8 டிப்ஸ்களை அளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

12-வது ஐபிஎல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஹைதராபாத்தில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனில் இதுவரை 3 முறை சிஎஸ்கே அணியை மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்துள்ளது.

ஆதலால், 4-வது முறையாக வென்று கோப்பையை 4-வது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெல்லுமா என்ற  எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்எழுந்துள்ளது. அதேபோல, சிஎஸ்கே அணி கோப்பையை தக்கவைக்குமா  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

tips.jpg 

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் பைனலிலும் சிஎஸ்கே அணியை எவ்வாறு எளிதாக மும்பை அணி வீழ்த்தலாம் என்பது குறித்து 8 டிப்ஸ்களை அளித்துள்ளார்.

1. மும்பை இந்தியன்ஸ் அணி 6 பந்துவீச்சாளர்களை களம் இறக்க வேண்டும்.

2. டாஸ் வென்றால் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்ய வேண்டும்.

3. பந்துவீச்சாளர்களில் மலிங்கா மற்றும் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோரை களமிறக்க வேண்டும்.

4. டீகாக், பொலார்டு, மலிங்கா, ஹென்ட்ரிக்ஸ் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களை களமிறக்க வேண்டும்.

5. இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, ராகுல் சாஹர், இஷான் கிஷான், பும்ரா ஆகியோர் இடம் பெற வேண்டும்.

6. ஹர்திக் பண்டியா 8 முதல் 16 ஓவர்களுக்கு இடையே பந்துவீச வேண்டும்.

7.மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்தால். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும். ஹர்பஜன் சிங் பந்துவீச்சை அடித்து துவைத்துவிட்டால் 6-வது பந்துவீச்சாளரை தேடுவது கடினம்

8. டீகாக், ரோஹித் சர்மா கூட்டணி மிகவும் முக்கியமானது. மும்பை அணி பந்துவீசும்போது முதல் 4 ஓவர்கள் முக்கியம். இந்த 4 ஓவர்களில் வாட்ஸன் மற்றும் டூப்பிளசிஸை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால், சிஎஸ்கேவை கட்டுப்படுத்துவது எளிது.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close