[X] Close

தோனி ஒரு சகாப்தம்; சிஎஸ்கேதான் மீண்டும் சாம்பியன்: ஹெய்டன் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 16:19 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

தோனி ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் அல்ல, அவர் ஒரு சகாப்தம். இந்த முறையும் சிஎஸ்கே அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான மாத்யூ ஹெய்டன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

12-வது ஐபிஎல் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுவரை 2 சீசன்கள் தவிர்த்து 10 சீசன்களில் 8 சீசன்களில் சிஎஸ்கே அணி 8-வது முறையாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுவரை 3முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஹோதாவில் இன்று குதிக்கின்றன.

தோனியைப் பொருத்தவரை கேப்டன் பதவிக்கு வந்தபின் தன்னை இதற்குமேல் வெற்றிகரமான கேப்டன் என்று நிரூபிக்க ஏதுமில்லை. அது இந்திய அணியாக இருந்தாலும் சரி, ஐபிஎல் போட்டியாக இருநதாலும் சரி. இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியிலும் ஆகச்சிறந்த பினிஷராகவே தோனி வலம்வந்துள்ளார். தோனியின் மின்னல் வேக கீப்பிங் திறமைக்கு இதுவரை எந்த அணியின் விக்கெட் கீப்பரும் போட்டியாக இருக்கவில்லை.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தோனியைப் பற்றி உங்களுக்கு ஒரு வீரராகத்தான் தெரியும். என்னைப் பொருத்தவரை தோனி சாதாரண வீரர் அல்ல. தோனி ஒரு சகாப்தம், கிரிக்கெட்டில் தோனி ஒரு சகாப்தம். ஒரு அணிக்கு தோனி கேப்டனாக இருந்தால், அந்த அணியை வைத்து தோனி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய திறமை படைத்தவர்.

ஒவ்வொரு போட்டிக்கும் தோனி எவ்வாறு தயாராகிறார், தன்னுடைய அணியின் லெக் ஸ்பின்னர்களை எவ்வாறு பயன்படுத்துகிறார், எவ்வாறு கேட்ச், ஸ்டெம்பிங் செய்கிறார் என்பதை கூர்ந்து கவனித்தால் புரியும். அதுமட்டுமல்லாமல் தனது வீரர்களை சுற்றி நிற்கவைத்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கூறிவிட்டு அவர் கூலாக செயல்படுவார்.

தோனி களத்தில் அமைதியாக இருக்கிறார் என்று கூட ரசிகர்கள் கேட்கலாம், அவர் தன்னை கூலாக வைத்துக்கொள்ள என்றுதான் கூற முடியும். அதனால்தான் தல என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். தல என்றால், சென்னை ரசிகர்கள்படி தலைவர் என்று அர்த்தம், ஆனால், நீங்கள் அவரை நாட்டின் தலைவர்போல் பாவிக்கிறீர்கள். இவ்வாறு ஹெய்டன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close