[X] Close

ரோஜர் பெடரர் தோல்வி


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:55 am
  • அ+ அ-

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதியில் ரோஜர் பெடரர் தோல்வியடைந்தார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் களிமண் தரையில் விளையாடப்படும் மாட்ரிட்ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வகையிலான ஆடுகளத்தில் சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு களமிறங்கிய4-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் தனது கால் இறுதி ஆட்டத்தில், 5-ம் நிலைவீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்த்து விளையாடினார்.

இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் முதல்செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் கடும் சவால் கொடுத்த டொமினிக் தியம் அந்தசெட்டை 7-6 என கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டை ரோஜர் பெடரர் 4-6 எனஇழந்தார்.

2 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்றஇந்த ஆட்டத்தில் 37 வயதான ரோஜர் பெடரரை 3-6, 7-6 (13/11), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் டொமினிக் தியம். மற்றொரு கால் இறுதியில் 3-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவரேவ் 5-7, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் கிரீஸின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸிடம் தோல்வியடைந்தார்.

முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 9-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்த்து விளையாட இருந்தார். ஆனால் மரின் சிலிச் உடல் நலம் பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.

2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் தனது கால் இறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை வீழ்த்தினார். அரை இறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் - டொமினிக் தியம், ரபேல் நடால் - சிட்சிபாஸிஸ் மோதுகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close