[X] Close

பர்பிள் கேப்பை விட என் அணியின் வெற்றி முக்கியம்: இம்ரான் தாஹிர்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 14:07 pm
  • அ+ அ-

பர்பிள் கேப்பைவிட என் அணியின் வெற்றி முக்கியம் என்று சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார்.

12-வது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டெல்லி அணியும், சென்னை அணியும் மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது.

இதில் டெல்லியுடனான ஆட்டத்தில் சென்னை வீரர் இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட் கூடுதலாக எடுத்திருந்தால் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் பர்பிள் கேப் வழங்கப்பட்டிருக்கும். எனினும் ஒரு விக்கெட்டில் அந்த வாய்ப்பை இந்த ஆட்டத்தில் இழந்தார் இம்ரான் தாஹிர்.

டெல்லி வீரர் ரபாடாதான் தற்போது பர்பிள் கேப்பை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இதனை ட்விட்டரில் ரசிகர் இம்ரான் தாஹிரை குறிப்பிட்டு ,”நீங்கள் பர்பிள் கேப் வாங்காமல் போனது சிறிது ஏமாற்றத்தை அளித்தது. சிறப்பாக பந்து வீசினீர்கள்”என்று பதிவிட்டர்.

இந்த பதிவை குறிப்பிட்டு இம்ரான் தாஹிர்,”

பர்பிள் கேப் என்னுடைய  எண்ணத்தில் இல்லை சிறிதளவு கூட இல்லை.  எனக்குத் தேவையானது எல்லாம் என் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே... நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close