[X] Close

ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்பிரிட்: ரெய்னாவுக்கு குவியும் வாழ்த்துகள்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:27 am
  • அ+ அ-

இறுதிப் போட்டிக்கு நுழையும் டெல்லியுடனான ஆட்டத்தில் டெல்லியின் இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு சென்னை வீரர் ரெய்னா ஷு லேசை கட்டிவிட்டது அனைவராலும் பாராட்டப்பட்டது.

12-வது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணியுடன் மோதும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டெல்லி அணியும், சென்னை அணியும் மோதிய இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியின் வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தனர். டெல்லி அணியின் ரிஷப் பந்த் ஓராளவு ரன்களை சேர்ந்தார். இதற்கிடையில் அவருக்கு காலில் பந்துப்பட அந்த வலியுடன் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கால்களில் ஷூ லேசை சென்னை அணிவீரர் ரெய்னா கட்டிவிடுவார். இதனைத் களத்திலிருந்து பார்த்த ரசிகர்கள் பலரும் கைதட்டி வரவேற்றனர்.

ட்வீட்  

சமூக வலைதளங்களில் பலரும் ரெய்னாவின் ஸ்போட்ஸ் மேன் ஸ்பிரிட்டை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close