[X] Close

எடுத்தது என்னவோ 1 ரன், ஓடியது 3 ரன் : வாட்சனுடன் பிட்சில் ஆடிய ‘கபடி கபடி’ ரன் பற்றி டுபிளெசிஸ் ஜோக்


1-3

  • kamadenu
  • Posted: 11 May, 2019 10:42 am
  • அ+ அ-

-நோபாலன்

147 ரன்களுக்கு டெல்லி கேப்பிடல்ஸை மட்டுப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் பிறகு இலக்கை விரட்டக் களமிறங்கி முதல் ஓவர் 3வது பந்தில் டெல்லிக்கு எளிதான ரன்  அவுட் வாய்ப்பை வழங்கினர், ஆனால் அதனை மிகக் கடினமாகக் கோட்டை விட்டது டெல்லி அணி. பார்ப்பதற்கு மிகவும் தமாஷாக இருந்தது இந்த நிகழ்வு.

 

அதாவது ட்ரெண்ட் போல்ட் முதல் ஒவரின் 32வது பந்தை வாட்சனுக்கு வீச வாட்சன் அதனை பாயிண்ட் திசையில் தட்டி விட்டார். எதிர்முனையிலிருந்த டுபிளேசிஸ் ஒரு ரன்னுக்காக ஓடி வந்து நின்றார். வாட்சனும் ஓடத்தொடங்கி நின்றார். இரு பேட்ஸ்மென்களும் நடுபிட்சில்  ‘மீட்டிங்’ போட்டனர். பிறகு அவர் ஓட இவரும் ஒட இருவரும் ஒரு திசை நோக்கி ஓடினர். மீண்டும் திரும்பினர். இப்படியாக விவரிக்க முடியாத காட்சி தமாஷானது. கடைசியில் டுபிளெசிஸ் ஒரு ரன்னை பூர்த்தி செய்தார்.

 

இந்தத் தமாஷ் சம்பவத்தில் எந்த முனையில் வேண்டுமானாலும் டெல்லி பீல்டர்கள் கேட்டு ரன் அவுட் செய்திருக்கலாம் ஆனால் இரு முனைகளிலும் வீசிய த்ரோ வெளியே சென்றது. நாங்கள் ரன் அவுட்தான் ஆவோம் என்று வாட்சன், டுப்ளேசிஸ் பிடிவாதம் பிடிக்க, டெல்லி கேப்பிடல்ஸோ ‘போங்க சார்.. நாங்க ரன் அவுட்லாம் செய்ய மாட்டோம்’ என்று கூறியது போல் இருந்தது அந்தச் சம்பவம், கிட்டத்தட்ட இருமுறை ஓடி, திரும்பி வாட்சனும், டுபிளேசிசும் கபடி ஆடியது பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, சிஎஸ்கே ரசிகர்கள் முகத்தில் கவலைகளையும் ஏற்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. இந்த ரன் அவுட் வாய்ப்பை எப்படி டெல்லி நழுவ விட்டது என்பது டெல்லிக்கே புரியாத புதிர்தான்.

 

இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டுபிளேசிஸ் ஆட்டம் முடிந்த பிறகு கூறியதாவது:

 

கடந்த 5, 6 போட்டிகளாக நாங்கள் சரியாக ஆடவில்லை. பெரிய போட்டிகளில் வென்றதால் எங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தது. அதிலிருந்துதான் வலுவான மனநிலையை பெற்றோம். முந்தைய இரண்டு போட்டிகளை இங்கு பார்த்த போது பிட்ச் நன்றாக இருந்தது, வீரர்கள் பெரிய ஷாட்களை ஆடினர். அதே போன்ற பிட்சைத்தான் எதிர்பார்த்தோம். ஆனால் பிட்ச் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை.

 

தொடக்கத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு ஆடினால் கூட்டணி அமைத்து அதனை பிறகு நீட்டிப்பதே எங்கள் பலமாக இருந்தது. பின்னால் நல்ல பேட்ஸ்மென்கள் இருப்பதால் ரன் ரேட் என்னவாக இருந்தாலும் பிடித்துவிடலாம் என்றே நினைத்தோம்.

 

ஆ.. அந்த ரன் அவுட் வாய்ப்பு.. ஆம் ஒடியது என்னவோ ஒரு ரன் தான், ஆனால் நான் 3 ரன் ஓடியதாக நினைக்கிறேன். நான் என்னைப் பார்த்தே சிரிக்க வேண்டியதாயிற்று காரணம் அது ஒரு மோசமான ரன்னிங்.

 

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close