[X] Close

ரிஷப் பந்த்திற்கு கேட்ச் விட்டு சிக்ஸ் கொடுத்ததால் சற்றே அதிருப்தியடைந்த தோனி: சாஹரை அகற்றி டுபிளெசிஸை நிறுத்திய மாற்றம்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:42 am
  • அ+ அ-

விசாகப்பட்டிணம் ஐபிஎல் நாக் அவுட் போட்டியில் நேற்று சிஎஸ்கே எளிதான வெற்றியைப் பெற்று டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிக் கனவை முறியடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் ரிஷப் பந்த் பெரும்பாலும் சிஎஸ்கேவினால் கட்டிப் போடப்பட்டார், இருந்தாலும் அவர் களத்தில் நின்று கொண்டிருந்தது தோனி உட்பட அனைவரையும் சிறிது பதற்றத்துக்கு ஆளாக்கியது.

 

ரிஷப் பந்த் தொடக்கத்தில் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.  இவர் நிற்கும் போதே ஒரு முனையில் விக்கெட் விழுந்து கொண்டிருந்தது, ஆனால் பந்த்  ஒருமுனையில் பந்த் நிதானம் கடைபிடித்து ஆடியதால் கடைசியில் ஒருவேளை அடித்து நொறுக்கி விடுவாரோ என்ற அச்சம் சிஎஸ்கே அணியினரிடத்தில் இருந்தது.

 

அதற்குத் தோதாக 17வது ஓவரில் இம்ரான் தாஹிர் பந்தை மிட்விக்கெட்டில் ஒரு அசாத்தியமான ஷாட்டில் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து கூக்ளியாக அதனை ஒருவழியாக லாங் ஆஃப் மேல் தூக்கி அடித்தார் ரிஷப் பந்த், இது மிஸ் ஹிட்தான் ஆனால் பந்து சிக்சரை நோக்கிச் சென்றது. லாங் ஆஃபில் தீபக் சாஹர் பவுண்டரி அருகே நின்று கொண்டிருந்தவர் கேட்சைப் பிடித்து விட்டார், ஆனால் அவர் தான் பேலன்ஸ் தவறி கோட்டைக் கடந்து விடுவோம் என்று நினைத்து பந்தை மீண்டும் இந்தப் பக்கம் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்.

 

ஆனால் அவர் லைனை கிராஸ் செய்ய அது சிக்ஸ் ஆனது. இப்போதெல்லாம் உலகம் முழுதும் டி20 போட்டிகளில் இத்தகைய கேட்ச்கள் சர்வ சகஜமாக மாறிவிட்ட நிலையில் சாஹர் சிக்ஸ் கொடுத்தது தோனி மறுப்பாக தலையை ஆட்டினார், கொஞ்சம் அதிருப்தி அவர் உடல்மொழியில் தெரிந்தது.

 

ஆனாலும் அவர் கவலைப்படாமல் அவர் அங்கிருந்து சாஹரை அகற்றிவிட்டு டுபிளேசிஸை கொண்டு நிறுத்தினார். பந்த் அப்போது 24 ரன்களில் இருந்தார்.

 

ஆனாலும் இந்த வாய்ப்பை பந்த்தினால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவர் கேட்சை விட்ட சாஹர் பந்திலேயே ஆட்டமிழந்தார்.  இவர் ஆட்டமிழந்த பிறகு மிஸ்ரா, போல்ட், ஆச்சரியமாக இஷாந்த் சர்மா மீதமுள்ள 8 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஸ்கோரை 147 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், இல்லையெனில் டெல்லி ஸ்கோர் 135 ரன்களில் முடிந்திருக்கும்.

 

பந்த்திற்கு கேட்ச் சிக்ஸாக மாறியது தோனியை சற்றே கவலைக்குட்படுத்தியது, இதுவே ரிஷப் பந்த் எதிரணி மீது செலுத்திய ஒரு தாக்கத்துக்கு உதாரணமானது. ஏனெனில் பந்த் கடைசி வரை நின்று இன்னும் 10-15 ரன்கள் கூட வந்திருந்தால் கூட சிஎஸ்கேவுக்கு கொஞ்சம் விரட்டல் கடினமாகியிருந்திருக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close