[X] Close

ஹாக்கியில் இந்தியா வெற்றி


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:08 am
  • அ+ அ-

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஹாக்கி சிரீஸ் பைனல்ஸ் தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியஆடவர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் ஒரு கட்டமாக பெர்த் நகரில் நேற்றுநடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணியுடன், இந்தியா மோதியது. இதில் இந்திய அணி 3-0 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது.

6-வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங்கும், 12 மற்றும் 13-வது நிமிடங்களில் சுமித் குமாரும் கோல் அடித்து அசத்தினர். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 13-ம் தேதி ஆஸ்திரேலிய தேசிய அணியை எதிர்கொள்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close