[X] Close

கேப்டன் மேலே இருக்கிறார்: இம்ரான் தாஹிர் பதிவால் நெகிழ்ந்த சிஎஸ்கே ரசிகர்கள்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 17:53 pm
  • அ+ அ-

கேப்டன் மேலே இருக்கிறார் என்று தோனியை குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் பதிவுக்கு இம்ரான் தாஹிர் கூறியதை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ள மற்றொரு அணியைமுடிவு செய்யக்கூடிய 2-வது தகுதி சுற்று ஆட்டம் இன்று இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் சிஎஸ்கே அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர்  தன்னுடைய டிரீம் லெவன் அணிக்கு நீங்கள்தான் கேப்டன். அதனால் சிறப்பாக விளையாடுங்கள் என்று சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிரை குறிப்பிட்டு இருந்தார்.

ட்வீட் 

அந்த பதிவை குறிப்பிட்டு இம்ரான் தாஹிர், கேப்டன் மேலே இருக்கிறார் என்று தோனியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இம்ரான் தாஹிரின் இந்த பதிலை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பாராட்டினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close