[X] Close

என்னையே அடிக்க வந்தவர்கள்தானே... அப்ரீடி சொல்வது சரிதான்: பாக். மூத்த வீரர்கள் குறித்து அக்தர் கடும் தாக்கு


  • kamadenu
  • Posted: 10 May, 2019 17:32 pm
  • அ+ அ-

-பிடிஐ

ஷாகித் அஃப்ரீடி தன் ‘கேம் சேஞ்சர்’ என்ற சுயசரிதை நூலில் முதலில் தன் உண்மையான வயதைக் கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார், அதே போல் அணியில் மூத்த வீரர்கள் தன்னை எப்படி ஒதுக்கினர், மோசமாக நடத்தினர் என்று அதே புத்தகதில் எடுத்து விட பாகிஸ்தான் முன்னாள்கள் சிலர் முகம் சுளிக்கத் தொடங்கினர்.

 

ஆனால் ஷோயப் அக்தர், அப்ரிடி தன் புத்தகத்தில் மிகக்குறைவாகவே இந்த இழிவு பற்றி கூறியுள்ளார், ஆனால் அதற்கு மேல் நடந்துள்ளது அதற்கெல்லாம் நான் சாட்சி என்று அப்ரீடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

37 பந்துகளில் தன் சர்வதேச முதல் ஒருநாள் சதத்தை எடுத்து உலகசாதனை புரிந்த போது தனக்கு வயது 21 என்பதை வெளியிட்ட அப்ரீடி, தான் பிறந்த ஆண்டு 1975 என்று வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

 

இதனையடுத்து அணியின் மூத்த வீரர்கள் தன்னை மோசமாக நடத்திய தருணங்கள் சிலவற்றை அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.  அதில் ஒரு சம்பவம் 1999-ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தன்னை வலைப்பயிற்சியில் பேட் செய்யவே அப்போதைய பயிற்சியாளர் ஜாவேத் மியாண்டட் அனுமதிக்கவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

 

இதுவும் சர்ச்சையாக, ஷோயப் அக்தர், அப்ரீடிக்கு ஆதரவாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய போது, “ஷாகித் அப்ரீடி தன் புத்தகத்தில் இது பற்றி மிகக்குறைவாகவே எழுதியுள்ளார். நானே மூத்த வீரர்கள் சிலர் அஃப்ரீடியை அவமானப்படுத்தியதை நேரில் பார்த்த சாட்சியாக இருக்கிறேன். அவர் இன்னும் அதிகமாக எடுத்து விட்டிருக்க வேண்டும்.

 

அவர் இவற்றை 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இப்போது புத்தகம் எழுத வேண்டிய தேவையிருக்காது.

 

மூத்த வீரர்கள் 10 பேர் உம்ரா எனும் ஹஜ் பயணத்துக்கு முன்பாக எங்களிடம் மன்னிப்பு கேட்டனர். எங்களை மன்னியுங்கள் என்றனர்.

 

என்னுடன் கூட சில மூத்த வீரர்கள் நான் அணியில் இருந்த காலத்தில் சண்டையிட்டுள்ளனர், உடல் ரீதியான மோதலுக்கும் தயாராக இருந்தனர். 

 

ஒரு முறை ஆஸ்திரேலியா தொடரில் 4 மூத்த வீரர்கள் என்னை நோக்கி வந்து பேட்டால் தாக்க முயன்றனர், ஆகவே அஃப்ரீடி கூறுவதில் தவறில்லை” என்றார் அக்தர்.

 

அக்தர் ட்வீட் 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close