[X] Close

இந்திய கால்பந்து பயிற்சியாளராகிறார் இகோர் ஸ்டிமக்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:10 am
  • அ+ அ-

குரோஷியாவைச் சேர்ந்த இகோர் ஸ்டிமக்கை இந்திய ஆடவர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்க தொழில்நுட்ப குழுவானது பரிந்துரை செய்துள்ளது.

51 வயதான இகோர் ஸ்டிமக், கடந்த 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்றிருந்தார். அனைத்து இந்திய கால்பந்து சம்மேனத்தின் தொழில்நுட்ப குழுவின் தலைவரான ஷியாம் தபா கூறுகையில், “ குரோஷியாவின் இகோர் ஸ்டிமக், தென் கொரியாவின் லீ மின் சங், ஸ்பெயினின் ஆல்பர்ட்டோ ரோகா, ஸ்வீடனின் கஹன் எரிக்சன் ஆகிய 4 பேரிடம் ஸ்கைப் வழியாக நேர்காணல் நடத்தினோம். இதில் இகோர் ஸ்டிமக், இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து, அவரது பெயரை அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.

தொழில்நுட்ப குழுவின் பரிந்துரைப்படி இகோர் ஸ்டிமக்கை புதிய பயிற்சியாளராக இன்று முறைப்படி அனைத்து இந்திய கால்பந்து சம்மேனம் அறிவிக்கும் என தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close