[X] Close

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் நுழைந்தது டோட்டன்ஹாம்: ஹாட்ரிக் கோல் அடித்து லுகாஸ் மோரா அசத்தல்


  • kamadenu
  • Posted: 10 May, 2019 08:10 am
  • அ+ அ-

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணி.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் நேற்று முன்தினம் ஆம்ஸ்டர்டாம் நகரில் அஜாக்ஸ் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணிகள் மோதின. இதில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் 3-2 என்ற கோல் கணக்கில் அஜாக்ஸ் அணியை வீழ்த்தியது.

அஜாக்ஸ் அணி தரப்பில் 5-வது நிமிடத்தில் டி லைட்டும், 35-வதுநிமிடத்தில் ஹக்கிம் ஸியெக்கும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் அஜாக்ஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில்டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பூர் அணியினர் கூடுதல் உத்வேகத்துடன் விளையாடினார்கள்.

அந்த அணியின் வீரரான லூகாஸ்மோரா 55 மற்றும் 59-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தின் 3-வது நிமிடத்தில் லூகாஸ் மோரா மீண்டும் கோல் அடிக்க அஜாக்ஸ் அணி அதிர்ச்சியில் உறைந்தது.

இரு அணிகளும் கடந்த 30-ம் தேதி லண்டனில் முதல் கட்ட அரை இறுதி ஆட்டத்தில் மோதியிருந்தன. சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பூர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. ஆனால் அஜாக்ஸ் அணியின் சொந்த மைதான ஆட்டத்தில்டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பூர் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் சராசரி கோல்கள் விகிதம் 3-3 என சமநிலை வகித்தது. வெளி மைதானத்தில் அடித்த கோல்களின் அடிப்படையில் டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதன்முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்தது டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பூர் அணி.

ஜூன் 1-ல் இறுதிப்போட்டிவரும் ஜூன் 1-ம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் டோட்டன் ஹாம் ஹாட்ஸ்பூர் அணி, லிவர்பூல் அணியை எதிர்கொள்கிறது. லிவர்பூல் அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸியின் பார்சிலோனா அணியை வீழ்த்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close