[X] Close

டெல்லியுடன் அவுட்டான விதத்தால் கிண்டலுக்கு உள்ளான அமித் மிஸ்ரா


  • kamadenu
  • Posted: 09 May, 2019 13:19 pm
  • அ+ அ-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் நடந்த போட்டியில் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா அவுட் ஆன முறையால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானார்.

2-வது ப்ளே ஆஃப்கான போட்டியில் மிகவும் முக்கியமான தருணத்தில் ஸ்டெம்ப்பை மறைத்து ஓடியதற்காக டெல்லி அணியின் வீரர் அமித் மிஸ்ராவுக்கு நடுவர்கள் அவுட் அளித்தனர்.

வெற்றியை நோக்கி அணி சென்று கொண்டிருக்கும் முக்கிய நேரத்தில் அமித் மிஸ்ரா இவ்வாறா நடந்து கொள்வார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்தனர்.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 2-வது ப்ளே ஆஃப் போட்டியில் பிரித்வி ஷா, ரிஷப் பந்த்  சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது.இதில் ரஷித் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து டெல்லி அணி தடுமாறியது. இருப்பினும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி, டெல்லி அணியை வெற்றிப்பாதையில் செல்ல வழிவகுத்தார்.

இதில் கடைசி ஓவரில் 3 பந்துக்கு 2 ரன்கள் தேவைப்படும்போது, டெல்லி அணி வீரர் அமித் மிஸ்ரா பந்துவீச்சாளர் கலீல் அகமத் ஸ்டெம்ப்பில் பந்தை அடிக்காமல் இருக்க, ஸ்டெம்ப்பை மறைத்துக்கொண்டு ஓடினார். இதனைத் தொடர்ந்து அவருக்கு நடுவர்கள் அவுட் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அமித் மிஸ்ரா சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானார்.

இவ்வாறான முறையில் வீர்ரகள்  அவுட்  ஆவது ஐபிஎல் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.

ட்வீட் 

— Irfan Pathan (@IrfanPathan) May 8, 2019

 

ட்வீட்

 

@Ironmaan

 

D6EH2G3UIAIytuY.jpg 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close