[X] Close

கடைசி 2 ஓவர்கள் ‘நரகம்’ : டென்ஷனை விவரித்த டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர்


2

  • kamadenu
  • Posted: 09 May, 2019 09:02 am
  • அ+ அ-

ஐபிஎல் ப்ளே ஆஃப் 2வது ஆட்டம் நேற்று நிறைய ட்ராமாக்களுடன், கடைசி ஒவர் பரபரப்பில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றியில் முடிந்தது. தற்போது சென்னையை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் இறுதிக்கனவை மெய்ப்படச் செய்ய வேண்டும்.

 

பவர் ப்ளேயில் பிரிதிவி ஷா பின்னி எடுக்க, கடைசியில் ரிஷப் பந்த் வெளுத்துக் கட்ட டெல்லி தரப்புக்கு ஆட்டம் மாறினாலும் பந்த், ரூதர்போர்ட் அவுட் ஆன பிறகு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் சூப்பர் ஓவருக்குச் சென்று விடும் என்ற நிலை இருந்தது, அமித் மிஸ்ரா பந்தின் வழியில் குறுக்காக வந்ததற்காக பீல்டரைத் தடுத்த விதிமீறலில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட கடைசி 2 பந்துகள் சீட் நுனிக்கு ரசிகர்ளைத் தள்ளியது, கடைசியில் கீமோ பால், கலீல் அகமெட் பந்தை மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்ட ரிக்கி பாண்டிங், கங்குலி உட்பட டெல்லி வீரர்கள் அனைவரும் குதியாட்டம் போட்டு வெற்றியைக் கொண்டாடினர்.

 

இந்த வெற்றி குறித்து ஆட்டம் முடிந்த பிறகு சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் பரிசளிப்பு நிகழ்ச்சியில் டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:

 

கடைசி ஒவர்... என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. நான் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், அந்தக் கடைசி 2 ஒவர்கள் நரகம்தான். வெற்றி பெறுவதில் உள்ள மகிழ்ச்சி சொல்லி முடியாது. அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கண்டேன்.  வெற்றி பெற்ற பிறகு அத்தகைய கொண்டாட்டம் தேவைதான்.

 

மார்டின் கப்தில் ஆடியதைப் பார்க்கும் போது, அதே உத்வேகத்தில் அவர்கள் சென்றிருந்தால் வெற்றி ஸ்கோரை எட்டியிருப்பார்கள் என்றே கருதினோம். ஆனால் அமித்மிஸ்ரா பிரமாதமான ஒரு பவுலிங்கைச் செய்தார். அனைவருமே பங்களிப்பு செய்தனர். 160 ரன்கள் கட்டுப்படுத்துவதற்குரிய ஸ்கோர்தான், ஆனால் மீண்டும், பிரிதிவி ஷா, ரிஷப் பந்த் அவர்கள் நாளில் கட்டுப்படுத்துவது கடினம்.

 

அவர்கள் பாணியில் ஆடினால் யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் வீண் தான் ஆகும். அதுமுடியாது. அவர்கள் போக்கில் ஆடினால் இருவரும் வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள்.

 

இவ்வாறு கூறினார் ஷ்ரேயஸ் அய்யர்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close