[X] Close

நீங்கள் உங்கள் கழுத்தை நீட்ட வேண்டாம்: ஹர்ஷா போக்ளேவுடன் மோதிய சஞ்சய் மஞ்சுரேக்கர்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 19:45 pm
  • அ+ அ-

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ‘உஷ் கண்டுக்காதீங்க’ ஆட்டம் ஆடி தோற்ற போட்டியில் ராபின் உத்தப்பா பந்துகளை விரயம் செய்தது கடும் விமர்சனங்களுக்கும் கேலிக்கும் ஆளானது.

 

இந்த விவகாரத்தில் நெட்டிசன்கள்தான் மோதிக்கொள்கின்றனர் என்றால் பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவும், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கரும் ட்விட்டரில் மோதியது கிரிக்கெட் உலகில் பரபரப்பானது.

 

ராபின் உத்தப்பா 47 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது, வேறு ஏதோ ஒரு கணக்கீட்டில் ராபின் உத்தப்பா அன்று பலிகடாவாக்கப்பட்டதாகத்தான் தெரிந்தது.

 

இந்நிலையில் ஹர்ஷா போக்ளே தன் ட்வீட்டில் ராபின் உத்தப்பாவுக்கு பரிந்து பேசிய போது, “நான் ராபின் உத்தப்பாவுக்காக என் கழுத்தை நீட்டத்தான் போகிறேன். அனைவருக்கும் மோசமான தினங்கள் அமைவது இயற்கை. ஆனால் வீரர்கள் கடினமாக ஆடினார்களா என்பதை வைத்து நாம் தீர்ப்பளிக்கிறோம். நாமும் நிறைய தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம். பெரிய பெரிய வீரர்களெல்லாம் மிகப்பெரிய சந்தர்ப்பங்களில் மறக்கக் கூடிய நாளாகும் விதத்தில் ஆடியுள்ளனர்.” என்று ட்வீட் செய்தார்.

 

இதற்கு சஞ்சய் மஞ்சுரேக்கர், “ராபின் உத்தப்பாவை மீண்டும் அணிக்குள் அழைத்து கொல்கத்தா அணி பெரிய விலை கொடுத்துள்ளது, காரணமில்லாமல் அவரைக் கொண்டு வந்து அதுவும் முக்கியமான டவுனில் அவரை இறக்கி... இது நிச்சயம் உத்தி ரீதியாக மிகத்தவறாகிப் போனது. தடுக்கப்படவேண்டிய ஒன்று, தடுக்கப்படாமல் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. நீங்கள் உங்கள் கழுத்தை இதில் சம்பந்தமில்லாமல் நீட்ட வேண்டியதில்லை” என்று ட்வீட் செய்திருந்தார்.

 

ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு பதில் அளித்த ஹர்ஷா போக்ளே, நான் தோல்விகள் பற்றியே என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். உத்தப்பா மீது மக்கள் கடுமை காட்ட வேண்டாம் என்பதே என் பதிவின் நோக்கம். அவர் முக்கியப் போட்டிகள் சிலவற்றில் நன்றாகவே ஆடினார், அவருக்காக வருந்துகிறேன் என்று பதிவிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close