[X] Close

கேதார் ஜாதவ் உலகக்கோப்பையில் ஆடுவாரா அல்லது மாற்று வீரரா? - ரிஷப் பந்த் அல்லது ராயுடுவா? - என்ன கூறுகிறது பிசிசிஐ


  • kamadenu
  • Posted: 08 May, 2019 18:01 pm
  • அ+ அ-

தோள்பட்டைக் காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிவரும் இந்திய உலகக்கோப்பை அணி வீரர் கேதார் ஜாதவ் உலகக்கோப்பையில் ஆடுவாரா என்பது பற்றி பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுவது யாதெனின் இப்போதைக்கு அவர் காயம் அவ்வளவு சீரியசானது இல்லை ஆகவே இப்போது வரைக்கும் அவர் இடம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இப்போது அணிகள் உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலில் மே 23ம் தேதிவரை மாற்றங்கள் செய்ய முடியும். அதன் பிறகு முடியாது, ஆகவே பிசிசிஐ முடிவெடுத்தால் அது மே 23ம் தேதிக்குள் இருக்க வேண்டும்.

 

கடந்த ஞாயிறன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேதார் ஜாதவ் பீல்டிங் செய்யும் போது காயமடைந்தார். இது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெளிவாகக் கூறும்போது, ஐபிஎல்-ஐப் பொறுத்தவரை அவர் ஆட்டம் முடிவுக்கு வருகிறது, அவருடன் இந்திய உடற்பயிற்சியாளர் பணியாற்றி வருகிறார் அது உலகக்கோப்பைக்காக அவரைத் தயார்படுத்தவே என்று கூறினார்.

 

இந்நிலையில் இந்திய உடற்பயிற்சியாளர் ஃபர்ஹார்ட், கேதார் ஜாதவ் உலகக்கோப்பைக்கு முன் உடற்தகுதி பெற்று விடுவார் என்று பிசிசிஐக்குத் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்தியா ஜூன் 5ம் தேதி தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது.

 

இந்நிலையில் கேதார் ஜாதவ் உடல்தகுதி பெறாமல் போனால் அவருக்குப் பதிலாக ரிசர்வ் வீரர்களான  ரிஷப் பந்த், அம்பதி ராயுடு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரிகிறது.

 

இந்நிலையில் இதுவரை கேதார் ஜாதவ் பங்கேற்பு பற்றி எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை என்றாலும் இது குறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை கேதார் ஜாதவ் தோள்பட்டைக் காயத்திலிருக்கிறார் என்பதே சரியாக இருக்கும்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close