[X] Close

''நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கலாம்''- சிஎஸ்கே ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட தாஹிர்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 15:13 pm
  • அ+ அ-

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் தோற்றதற்காக, சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர்  ரசிகர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் கொஞ்சம் திக்குமுக்காடி, பிறகு சிஎஸ்கேவை விட ஓரளவுக்கு நன்றாக பேட் செய்து 18.3 ஓவர்களில் 132/4 என்று வெற்றி பெற்று 5-வது முறையாக ஐபிஎல் இறுதிக்கு முன்னேறியது.

அடுத்த குவாலிபையர் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசாகப்பட்டினம் சென்றது.இந்நிலையில் இதுவரை சென்னையில்  நடந்த போட்டிகளில் ஆதரவு அளித்தற்காக இம்ரான் தாஹிர் சென்னை ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.

அதற்கு சென்னை ரசிகர் ஒருவர், ''நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம். எங்களுடைய எதிரி அணியான மும்பையிடம் இந்த சீசனில் சிஎஸ்கே தொடர்ந்து மூன்று முறை தோல்வி அடைந்தது. என்ன இருந்தாலும் இது விளையாட்டுதான். நாங்கள் எப்போது சிஎஸ்கே மீது நம்பிக்கை வைத்துள்ளோம்.

நாம் மீண்டும் உறுதியாக வருவோம். சிஎஸ்கே மீதான அன்பு என்று குறையாது'' என்று பதிவிட்டார்.

இந்தப் பதிவைக் குறிப்பிட்டு இம்ரான் தாஹிர், ''உங்களைப் போன்ற உண்மையான ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். அடுத்த ஆட்டத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சிறப்பாகச் செயல்படுவேன்'' என்று பதிலளித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close