[X] Close

தோனி எனது முன்னுதாரணம்: ஹர்திக் பாண்டியா


  • kamadenu
  • Posted: 08 May, 2019 12:37 pm
  • அ+ அ-

மகேந்திர சிங் தோனி எனது முன்னுதாரணம் என்று மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில், முதலில் ஆடிய சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் கொஞ்சம் திக்குமுக்காடி, பிறகு சிஎஸ்கேவை விட ஓரளவுக்கு நன்றாக பேட் செய்து 18.3 ஓவர்களில் 132/4 என்று வெற்றிபெற்று 5-வது முறையாக ஐபிஎல் இறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் மும்பை அணியின் ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “ தோனி எனது முன்னுதாரணம், எனது சகோதரர், எனது நண்பர்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்வீட் 

2019 ஐபிஎல் சீசன் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக மும்பை அணிக்கு சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close