[X] Close

சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்கை முகம் சுளிக்க வைத்த சஞ்சய் மஞ்சேரக்கர் பேச்சு: விமர்சித்த நெட்டிசன்கள்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 11:04 am
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் முகம் சுளிக்கும்படி வர்ணனையாளர் மஞ்சுரேக்கர் பேசியதை நெட்டிசன்கள் பலர் விமர்சித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்து அறுவையான ஒரு பேட்டிங் ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் கொஞ்சம் திக்குமுக்காடி, ஆனால் சிஎஸ்கேவை விட ஓரளவுக்கு நன்றாக பேட் செய்து 18.3 ஓவர்களில் 132/4 என்று வெற்றிபெற்று 5-வது முறையாக ஐபிஎல் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் மும்பை அணி விளையாடிக் கொண்டிருக்கும்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர் சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கிடம் சென்று பேட்டி எடுத்தார். அப்போது இந்தப் போட்டியில் எல்லா முடிவுகளையும் தோனிதான் எடுக்கிறார் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் இவர்தான் எடுத்திருக்கிறார் என்று பிளெமிங்கை நோக்கிக் கூறினார்.

மஞ்சுரேக்கர் இந்தப் பேச்சை கேட்டு பிளெமிங் சற்று முகம் சுளித்தபடி திரும்பினார்.

மீண்டும் பிளமிங்குக்கு அசவுகரியம் அளிக்கும்படியான கேள்விகளைக் கேட்டார் மஞ்சுரேக்கர்.

மஞ்சுரேக்கரின் இந்தப் பேச்சை பலரும் விமர்சித்தனர். மேலும், சஞ்சய் மஞ்சுரேக்கர் வர்ணனையாளராக இருந்துகொண்டு மும்பை அணிக்கு ஆதரவாக எப்படிப் பேசுகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close