[X] Close

இங்கு ஸ்பின்னர்கள் பேட்ஸ்மெனிடமிருந்து பந்தைத் தள்ளி வீச வேண்டும்: தோல்விக்குப் பிறகு தோனி கச்சிதம்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 07:53 am
  • அ+ அ-

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் ப்ளே ஆஃப் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மீண்டும் ஒரு முறை ஊதித்தள்ளி இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.

 

மும்பை இந்தியன்ஸ் ஸ்பின்னர்கள் சாஹர், ஜெயந்த் யாதவ், க்ருணால் பாண்டியா ஆகியோர் மீண்டுமொரு முறை சென்னைக்கு அதன் சொந்த மண்ணில் ஆட்டம் காட்டினர். காரணம், சென்னை பேட்டிங்கும்  ‘தள்ளாத’ வயதில் ஒன்றும் செய்ய முடியவில்லை, மும்பை ஸ்பின்னர்களும் பந்தை ட்ரைவ் செய்ய வாகாக வீசவில்லை அதே போல் பின்னால் சென்று அடித்து ஆடவும் விடவில்லை.

 

மாறாக சிஎஸ்கே ஸ்பின்னர்களை சூரியகுமார் யாதவ் புகுந்து விளையாடினார். மும்பை இந்தியன்ஸ்  ஸ்பின்னர்கள் போல் சிஎஸ்கே ஸ்பின்னர்கள் வீசாததை தோனி கன கச்சிதமாக போட்டிக்குப் பிறகான பேட்டியில் பிடித்தார்.

 

தோனி கூறியதாவது:

 

யாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆக வேண்டும். பேட்டிங் சரியாக ஆடவில்லை. இப்போது இறுதிப்போட்டிக்கு ஓவர் த விக்கெட் வழி செல்லாமல் ரவுண்ட் த விக்கெட் வழியில் செல்ல வேண்டும்.

 

நம் பிட்சை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதைச் செய்ய தவறிவிட்டோம். பேட்டிங் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம். டாப் ஆர்டர் பேட்டிங் ஆடுவதும் ஆடாததுமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஆட வேண்டும். அடுத்த போட்டியில் பார்ப்போம்.

 

துரதிர்ஷ்டவசமாக சில கேட்ச்கள் விடப்பட்டன. ஆனால் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வீசியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இங்கு ஸ்பின்னர்கள் பேட்ஸ்மென்களுக்குக் கொஞ்சம் தள்ளி பந்துகளை வீச வேண்டும்.

 

போதிய ரன்கள் இல்லாத போது ஒவ்வொரு பவுண்டரியும் நம்மைக் காலி செய்து விடும். நல்ல தொடக்கத்துக்குப் பிறகே பவுண்டரிகளைக் கொடுக்கத் தொடங்கினோம். என்னவென்றால் டாப் 2 இடங்களில் இருப்பதால் இன்னொரு வாய்ப்பு உள்ளது.

 

இவ்வாறு கூறினார் தோனி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close