[X] Close

உலகக்கோப்பையில் அஸ்வினின் ‘டிப்ஸ்களை’ பயன்படுத்துவேன்: ஆப்கான் லெக் ஸ்பின்னர் முஜீப் உர் ரஹ்மான்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 17:48 pm
  • அ+ அ-

-பிடிஐ

இந்திய அணித்தேர்வாளர்களாலும் கேப்டன் விராட் கோலியாலும் ஒருநாள் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அஸ்வினின் ஸ்பின் ஆலோசனைகளை உலகக்கோப்பையில் நிச்சயம் பயன்படுத்துவதாக ஆப்கான் லெக் ஸ்பின்னரும் கிங்ஸ் லெவன் வீரருமான முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தோள்பட்டைக் காயம் காரணமாக 18 வயது முஜீப் இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் அணிக்காக சரியாக வீச முடியவில்லை. 5 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகளை ஓவருக்கு 10.05 என்ற சிக்கன விகிதத்தில் அவர் கைப்பற்றி சொதப்பியுள்ளார், குறிப்பாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 4 ஓவர்களில் 66 ரன்களை கொடுத்து கேலிக்குரியவரானதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் அவர் கூறியதாவது:

கிங்ஸ் லெவன் செட்-அப்பிலிருந்து நான் அஸ்வினிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன், அவர் பயனுள்ள பல ஆலோசனைகளை எனக்கு வழங்கியுள்ளார்.  நிச்ச்யம் அவரது திட்டங்களை உலகக்கோப்பையில் நான் பயன்படுத்துவேன். இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் தோள்பட்டைக் காயம் பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆனால் இப்போது உலகக்கோப்பைக்கு முழு உடற்தகுதி பெற்று விட்டேன்.

ஐபிஎல் அட்டவணை மிகவும் நெருக்கடியானது, நிறைய பயணங்கள்,  உலகக்கோப்பையில் ஆடும் பேட்ஸ்மென்களுக்கு இங்கு வீச வாய்ப்புக் கிடைத்தது, அதுதான் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானது.

சில தினங்கள் நமக்கு மோசமாக அமையும், ஆனால் நாம் லைன் மற்றும் லெந்த்தில் சீரான முறையில் வீச வேண்டியது அவசியம்.

உலகக்கோப்பையில் எங்கள் நோக்கம் குறைந்தது அரையிறுதிக்குள் நுழைவதே. ரஷீத், நான், நபி ஆகிய எங்களிடம் பலதரப்பட்ட பலங்கல் உள்ளன, நாங்கள் நிறைய திட்டமிடுவோம் அதனைச் செயல்படுத்துவோம். தொடர்ந்து சீராக நல்ல இடங்களில் பந்தைப் பிச் செய்ய வேண்டும். இந்த உலகக்கோப்பையிலும் இதனை செய்வோம் என்று கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் முஜீப்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close