[X] Close

விராட் கோலி தலைமையின் கீழும் தோனி ஆடவில்லையா? - ஆப்கன் உ.கோப்பை அணிக்கான கேப்டன் மாற்றம் பற்றி தலைமைத் தேர்வாளர்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 17:01 pm
  • அ+ அ-

-பிடிஐ

உலகக்கோப்பை தருணத்தில் ஆப்கான் ஒரு நாள் அணியின் கேப்டனாக அனுபவசாலியான அஷ்கர் ஆப்கான் நீக்கப்பட்டு குல்பதின் நயீப் தேர்வு செய்யப்பட்டது குறித்து உலகப்புகழ் பெற்ற ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஹீத் கான், மொகமது நபி ஆகியோர் “கேப்டன் மாற்ற நேரம் தவறானது” என்று விமர்சனம் வைத்தனர்.

அஸ்கர் ஆப்கான் 3 வடிவங்களிலும் ஆப்கான் கேப்டனாக இருந்தவர் தற்போது எந்த வடிவத்துக்கும் கேப்டனாக இல்லை ஒருநாள் அணிக்கு குல்பதின் நயிப், டி20 அணிக்கு ரஷீத் கான், டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹமத் ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இது குறித்து பலத்த விமர்சனம் ஆப்கான் அணி வீரர்களிடமிருந்து எழுந்தது.

இந்நிலையில் பிடிஐ-க்கு நேர்காணல் அளித்த ஆப்கன் அணியின் தலைமைத் தேர்வாளர் தவ்லத் கான் அஹமட்ஸய் கூறியதாவது:

அஸ்கர் ஆப்கான் அல்லது வேறு ஒருவர் கேப்டன்சியில் நாங்கள் உலகக்கோப்பையை எப்படியிருந்தாலும் வெல்லப்போவதில்லை. ஆகவே நாங்கள் 2023 உலகக்கோப்பையை மனதில் கொண்டு எதிர்கால கேப்டன்களை அறிவித்தோம்.

ஐசிசி டாப் அணிகளுடன் உலகக்கோப்பையில் 10 ஆட்டங்களில் விளையாடவிருப்பது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பயிற்சி அதுவும் குறிப்பாக புதிய கேப்டன் குல்பதின் நயீபுக்கு அளப்பரிய அனுபவமாகும்.

 

ரஷீத் கான், நபி ஆகியோர் உங்களைப்போலவே கவலைகளை எழுப்பினர், ஆனால் அனைத்தும் தொழில்நேர்த்தியுடன் செய்துள்ளோம். எதிர்காலமே முக்கியம். அவர்கள் இது மாற்றத்துக்கான நேரம் அல்ல என்றனர், ஆனால் இப்போது இவர்களே புரிந்து கொண்டு விட்டனர், அணியின் நலன் கருதியே என்பதை.

இப்போது அணி உறுப்பினர்கள் ரஷீத் கான், நபி உட்பட புதிய கேப்டன் குல்பதினை நியமித்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர் ஒரு புதிய கேப்டன், 17 ஆண்டுகளாக ஆடிவருகிறார், கேப்டன்சி அனுபவம் உள்ளவர்.

அஸ்கரே குல்பதின் பற்றி கூறும்போது தன்னுடைய தம்பி மாதிரி என்றார், மேலும் தன்னுடைய அனுபவம் நிச்சயம் அவருக்குக் கைகொடுக்கும் இப்போது அவர்கள் ஐக்கிய முன்னணி ஆவார்கள். மாற்றங்கள் நிகழும், இலங்கை அணியும் அவர்கள் கேப்டனை மாற்றியுள்ளனர்.

தோனி, விராட் கோலி கேப்டன்சியில் ஆடவில்லையா, அதே போல் அஸ்கர் ஆப்கான், நயீப் தலைமையின் கீழ் ஆடுவார், தோனி கோலிக்கு ஆலோசனைகள் வழங்குவது போல் அஸ்கர் ஆப்கான் நயீபுக்கு வழங்குவார்.

கடந்த முறை ரஷீத், முஜீப் உர் ரஹ்மான் இல்லை, இம்முறை நாங்கள் அரையிறுதிக்குக் குறிவைக்கிறோம்,  எங்கள் அணி சிலபல அணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும்

ஸ்பின்னர்களை நம்பியில்லை ஹமித் ஹசன் என்ற வேகப்பந்து வீச்சாளர் வருவது மிகப்பெரிய பலம், அவரும் தவ்லத் ஸத்ரானும் வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொள்வார்கள்.

 நல்ல சமச்சீரான அணியாக எங்கள் அணி இருக்கிறது, ரஷீத் கான் கவுண்டி கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் நன்றாக ஆடி அனுபவம் பெற்றவர், முஜீப் உர் ரஹ்மான் புதிய பந்திலும் வீசக்கூடியவர், நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், ஆகவே ஒரு மகிழ்ச்சியான யூனிட்டாக உலகக்கோப்பைக்குச் செல்கிறோம்.

இவ்வாறு கூறினார் தவலத் கான் அகமத்ஸய்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close