[X] Close

தோனியிடம் பேசியது என்ன?- ப்ரீத்தி ஜிந்தா ட்வீட்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 14:40 pm
  • அ+ அ-

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் உள்ள புகைப்படத்தைப் பதிவிட்டு சுவாரஸ்யமான தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் முடிவில் தோனியின் தீவிர ரசிகரான ப்ரீத்தீ  ஜிந்தா, அவருடன் பேசும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பீரித்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ”கேப்டன் கூல் தோனி, நான் உட்பட பல ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த முறை எனது விஸ்வாசம் அவரது மகள் ஸிவாவிடம் மாறியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் நான் அவரிடன் நான் ஸிவாவைக் கடத்தலாம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறினேன்.

இது உங்களுக்கான நேரம். இந்தப் புகைப்படத்துக்குத் தலைப்பிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ட்வீட் 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close