[X] Close

அப்ரிடி சுயநலவாதி; பல வீரர்களின் வாழ்க்கையை அழித்தவர்: இம்ரான் பர்கத் காட்டம்


  • kamadenu
  • Posted: 07 May, 2019 11:54 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

ஷாகித் அப்ரிடி தனது சுயநலத்துக்காக பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்திருக்கிறார் என்று பாகிஸ்தான் அணி வீரர் இம்ரான் பர்கத் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தி கேம்சேஞ்சர் எனும் பெயரில் தனது கிரிக்கெட் வாழக்கை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் பல நாடு வீரர்கள், சம்பவங்கள் குறித்து அப்ரிடி வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை வம்புக்கு இழுக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கம்பீர் திமிர்பிடித்தவர், எந்த சாதனையும் செய்யாத நிலையில் கர்வத்துடன் இருப்பார் என்று தெரிவித்தார். இதற்கு கம்பீரும் பதிலடி கொடுத்து, அப்ரிடிக்கு மனநிலை சரியில்லை என்று தெரிவித்திருந்தார். இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் நீடித்தது.

மேலும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத், வக்கார் யூனுஸ் ஆகியோரும் அப்ரிடியின் புத்தகம் குறித்து விமர்சித்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் இம்ரான் பர்ஹத் ட்விட்டரில் அப்ரிடியை கடுமையாக விளாசியுள்ளார். அவர் கூறுகையில், "அப்பிரிடியின் புதிய புத்தகத்தை படித்தபோதும், சிலர் அது குறித்து பேசியபோதும் எனக்கு உண்மையில் வெட்கமாக இருந்தது. ஒரு கிரிக்கெட் வீரர் தனது உண்மையான வயதை மறைத்து 20 வயது எனக் கூறி, விளையாடிவிட்டு, நல்லவர் மாதிரி வேடமிட்டு, மிகப்பெரிய வீரர்கள் குறித்து விமர்சிப்பது அசிங்கமாக இருக்கிறது.

இந்த துறவி போன்று காட்சியளிக்கும் அப்ரிடி குறித்து நான் ஏராளமான கதைகள் கேட்டிருக்கிறேன். அப்ரிடிக்கு நல்ல திறமை இருக்கிறது, அவர் அரசியலுக்குள் செல்லலாம்.

அப்ரிடி குறித்து பல கதைகள் என்னிடம் இருக்கிறது, என்னைப் போல பலவீரர்களிடம் இதுபோன்ற கதைகள் இருக்கும், அதை அறிந்தவர்கள் பேச முன்வந்து அந்த சுயநலம் படைத்த வீரரின் உண்மையான முகத்தை அறிய வைக்க வேண்டும். ஏராளமான வீரர்களின் வாழ்க்கையை தனது சுயநலத்துக்காக அப்ரிடி அழித்துள்ளார் " எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்ஹத் 40 டெஸ்ட் போட்டிகளில், 2400 ரன்களும்,  58 ஒருநாள் போட்டிகளில் 1719 ரன்களும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close