[X] Close

உலகக் கோப்பைக்கான மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயிலுக்கு புதிய பதவி


  • kamadenu
  • Posted: 07 May, 2019 09:07 am
  • அ+ அ-

-ஏ.என்.ஐ.

மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கறிஸ் கெயில் உலகக் கோப்பைக்கான அணியில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில்ஜேஸன் ஹோல்டர் கேப்டன் பொறுப்பில் இருந்து வருகிறார், உலகக்கோப்பைப் போட்டியிலும் கேப்டனாக ஹோல்டர் தொடர்கிறார். இந்த முத்தரப்பு தொடரில் துணைக் கேப்டனா சாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இம்மாதம் 30-ம் தேதி ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கேப்டனாக ஹோல்டர் மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், ஹோல்டருக்கு உதவியாக அனுபவ வீரர் கிறிஸ் கெயிலை துணைக் கேப்டனாக மே.இ.தீவுகள் வாரியம் நியமித்துள்ளது.

இதுகுறித்து கிறிஸ் கெயில் கூறுகையில், " உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வழிநடத்திச் செல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அணியில் மூத்த வீரரான எனக்கு கேப்டனுக்கா ஆதரவாக செயல்பட வேண்டிய பொறுப்பு இருக்கிறது, மற்ற வீரர்களும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும்.

உலகக் கோப்பைத் தொடர் மிகப்பெரிய தொடர். அனைவரும் இதில் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். நாங்கள் அனைவரும் மேற்கிந்தியத்தீவுகள் சிறப்பாக வெற்றி பெற முழு உழைப்பையும் அளிப்போம் " எனத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக மேற்கிந்தியத்தீவுகள் அணி இம்மாதம் 26-ம் தேதி, 28-ம் தேதி தென் ஆப்பிரிக்கா, மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி விவரம்:

ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்), கிறிஸ் கெயில்(துணைக் கேப்டன்) ஆன்ட்ரூ ரஸல், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பிராத்வெய்ட், நிகோலஸ் பூரன், டேரன் பிராவோ, எவின் லூயிஸ்,ஃபேயின் ஆலன், கீமர் ரோச், ஓஸ்னே தாமஸ், ஷாய் ஹோப், ஷானன் கேப்ரியல், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரன் ஹெட்மயர்

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close