[X] Close

உடற்பயிற்சி சவாலை ஏற்ற கோலி: பிரதமர், தோனிக்கு அழைப்பு


virat-kohli-accepts-ministers-challenge-does-spider-plank-tags-pm-modi

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 May, 2018 08:53 am
  • அ+ அ-

மத்திய அமைச்சர் விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அதை செய்துகாட்டியதோடு பிரதமர் மோடிக்கும், கிரிக்கெட் வீரர் தோனிக்கும் ஃபிட்னஸ் சவால் விடுத்திருக்கிறார்.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோ, தான் புஷ் அப்ஸ் செய்யும் வீடியோவை பதிவை செய்து அதை ட்விட்டரில் பகிர்ந்து இதுபோன்றே எல்லோரும் தங்களது ஃபிட்னஸ் மந்த்ரா வீடியோவை பகிர வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த ட்வீட்டில் அவர் கோலி, நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.

உடற்பயிற்சிகள் மீது அதீத ஆர்வம் கொண்ட விராட் கோலி உடனடியாக அந்த சவாலை ஏற்றுக் கொண்டு புஷ் அப்ஸ் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அதேபோல் உடற்பயிற்ச்சியை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் தனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஸ்பைடர் பிளான்க்ஸ் எனும் உடற்பயிற்சியை 20 முறை செய்த கோலி அதை வீடியோவாகவும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவுக்கு ட்விட்டராட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி விரைவில் உடற்பயிற்சி வீடியோவைப் பகிர்வதாக ட்விட்டரில் பதில் கூறியிருக்கிறார்.

வீடியோவைக் காண:

https://twitter.com/imVkohli

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close