[X] Close

மகளிருக்கான டி 20 சேலஞ்ச் தொடர்: ஸ்மிருதி மந்தனா 90 ரன்கள் விளாசல்


20-90

  • kamadenu
  • Posted: 07 May, 2019 07:47 am
  • அ+ அ-

மகளிருக்கான டி 20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடர் ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் டிரையல் பிளேஸர்ஸ், சூப்பர் நோவாஸ், வெலாசிட்டி ஆகிய 3 அணிகள் கலந்து கொண்டுள்ளன. மகளிருக்கான ஐபிஎல் டி 20 தொடரை நடத்துவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்தத் தொடரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல் பிளேஸர்ஸ், ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிரையல் பிளேஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது. மந்தனா 67 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசினார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஹர்லீன் தியோல் 44 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து 141 ரன்கள் இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close