[X] Close

உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அற்புதமான வாய்ப்பு: திலிப் வெங்க்சர்க்கார் கருத்து


  • kamadenu
  • Posted: 07 May, 2019 07:48 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வெல்ல அற்புதமான வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கேப்டன் திலிப் வெங்க்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுத்தாம்டனில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டி 20 மும்பை லீக் தொடரின் அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்க்சர்க்கார் கூறுகையில்,“உலகக் கோப்பையை வெல்வதற்கான சிறந்த வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. குறைந்த பட்சம் இந்திய அணி நிச்சயம் அரை இறுதி வரை செல்லும்.

ஆனால் இறுதிப் போட்டிக்கு எந்த அணி முன்னேறும் என்பதை என்னால் உண்மையிலேயே கணிக்க முடியவில்லை. இந்திய அணியிடம் அதீதமான வளம் உள்ளது. அனைத்து வீரர்களுமே சிறந்த பார்மில் உள்ளனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். -

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close