[X] Close

மாநில கிரிக்கெட் சங்கங்களில் 19 உறுப்பினர் கொண்ட குழு: பிசிசிஐ விரைவில் முடிவு?


19

  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:25 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மாநில கிரிக்கெட் சங்கங்களில் உள்ள அபக்ஸ் கவுன்சில் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 19 ஆக உயர்த்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ-யுடன் இணைக்கப்பட்டுள்ள மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களது அபக்ஸ் கவுன்சிலில் 9 பேர் கொண்ட உறுப்பினர்களை வைத்திருக்கலாம் என்பது விதி. இந்த நடைமுறையை மாநில சங்கங்கள் நீண்ட ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றன.

அதாவது அபக்ஸ் கவுன்சிலில் தலைவர், துணைத் தலைவர், செயலர், இணைச் செயலர், பொருளாளர், 2 வீரர் பிரதிநிதிகள் (ஆண், பெண்), சிஏஜி பிரதிநிதி, மாநில சங்கத்தின் நிர்வாகி ஒருவர் என 9 பேர் இருக்கலாம். இந்தக் குழுவின் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 19-ஆக அதிகரிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 36 கிரிக்கெட் சங்கங்களில் 30 சங்கங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

பிசிசிஐ-யை சீரமைக்க அமைக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைப்படி தற்போது பிசிசிஐ-க்கும் நீதிமன்றத்துக்கும் இடையே நடுநிலையாளராக பி.எஸ்.நரசிம்மா செயல்பட்டு வருகிறார்.

மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது பிசிசிஐ-யை நிர்வாகக் குழுவினர் (சிஓஏ) நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே கிரிக்கெட் சங்கங்களின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடுநிலையாளர் பி.எஸ். நரசிம்மா விரைவில் அறிக்கையா தாக்கல் செய்யவுள்ளார்.

சங்கங்களின் கோரிக்கைக்கு பிசிசிஐ-யின் நிர்வாகக் குழுவும் விரைவில் அனுமதி தரும் என்று தெரிகிறது. அதன்படி ஒவ்வொரு கிரிக்கெட் சங்கமும் இனி 19 பேர் கொண்ட அபக்ஸ் கவுன்சில் உறுப்பினர்களை வைத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான உத்தரவு விரைவில் பிசிசிஐ-யிடமிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close