[X] Close

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் குர்கீரத் சிங் மான் உற்சாகம்


  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:23 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இந்த ஐபிஎல் சீசனில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினேன் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் குர்கீரத் சிங் மான் கூறினார்.

நேற்று முன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குர்கீரத் சிங் மான் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 65 ரன்களைக் குவித்து வெற்றி தேடித் தந்தார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் கூறும்போது, “எங்கள் அணிக்கு எந்த நெருக்கடியும் இல்லை. இந்த ஐபிஎல் சீசனில் எனக்கு 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இன்றைய ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து ஆடினேன்.

வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியுள்ளேன் என்று நினைக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக நான் ஐபிஎல் போட்டிகளில் ஆடிவந்தபோதும் பேட்டிங் செய்யசரியான வாய்ப்புகள் அமையவில்லை. இன்று வாய்ப்பு வந்தபோது அதை விட்டுவிடாமல் சரியாகப் பயன்படுத்தினேன்.

களத்தில் பேட்டிங் செய்ய செல்லும்போது நீங்கள் உங்கள் திறமையை கண்டிப்பாக நிரூபிக்கவேண்டும். இந்த நாள் எனக்கு அதிர்ஷ்ட நாளாக அமைந்தது. போட்டியில் அதிக ஓவர்கள் மீதம்இருந்தன. இதனால் நீண்ட இன்னிங்ஸ் விளையாட முடியும் என்றுநம்பினேன். பெரும்பாலும் நடுவரிசை ஆட்டக்காரர்களுக்கு போதிய அளவில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. கடைசிநான்கு அல்லது ஐந்து ஓவர்களில் மட்டுமே விளையாடவாய்ப்புக் கிடைக்கும். அப்போது கிடைக்கும் பந்துகளை எல்லாம்அடித்து நொறுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் இந்த முறை வேறு மாதிரியாக அமைந்தது. எதிர் முனையில் ஹெட்மயர் சிறப்பாக அடித்துநொறுக்க, நான் மறு முனையில் அவருக்கு ஆதரவாக நின்றேன்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close