[X] Close

ஐபிஎல் போட்டியில் தொடர் தோல்வியில் இருந்து மீள்வது சாதாரண விஷயம் அல்ல: கேப்டன் விராட் கோலி பேட்டி


  • kamadenu
  • Posted: 06 May, 2019 08:21 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

ஐபிஎல் போட்டியில் முதல் 6 ஆட்டங்களில் தொடர் தோல்வி கண்டு பின்னர் மீண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி கண்டது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு பெற்ற 5-வது வெற்றியாகும் இது.

பெங்களூரு அணியின் பார்தீவ் பட்டேல் 0, விராட் கோலி 16, ஏபி டிவில்லியர்ஸ் 1 ரன் எடுத்து அவுட்டான போதிலும் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிம்ரன் ஹெட்மயரும், குர்கீரத் சிங் மானும் அபாரமாக ஆடி ரன் குவித்தனர். ஹெட்மயர் 47 பந்துகளில் 75 ரன்களும், குர்கீரத் 48 பந்துகளில் 65 ரன்களும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் உமேஷ் யாதவ் 4 பந்துகளில் 9 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வு பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிடைத்த புள்ளிகள் பெங்களூரு அணிக்கு உதவாத போதிலும் அந்த அணிக்கு இது ஒரு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

வெற்றிக்குப் பின்னர் விராட் கோலி கூறியதாவது: இந்த ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் தொடர்ந்து 6 தோல்விகளைப் பெற்றோம். பின்னர் 2-வது பாதியில் சுதாரித்து ஆடினோம். இதன்மூலம் இந்த சீசனில் நாங்கள் மோசமாக விளையாடவில்லை என்ற உணர்வு வந்துள்ளது.

முதல் 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி கண்டு பின்னர் மீண்டு வருவது என்பது மிகவும் கடினமான காரியம். இந்த சீசனில் பல விஷயங்களை நாங்கள் கற்று உணர்ந்தோம்.

நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனாலும், எங்களது செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

புள்ளிகள் பட்டியலில் நாங்கள் விரும்பிய இடத்தை எங்களால் பெற முடியவில்லை. கடைசி 8 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றோம். ஒரு போட்டி மழையால் தடைபட்டது. இது எங்களுக்கு ஓரளவுக்கு பெருமை தருகிறது.

கடைசி ஆட்டத்தில் ஹெட்மயரும், குர்கீரத் சிங் மானும் அபாரமாக விளையாடி அரை சதமடித்தனர். எங்களுக்கு உற்சாகமளித்த பெங்களூரு ரசிகர்களுக்கு எங்கள் நன்றி. ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு அதிக உற்சாகத்தை ரசிகர்கள் அளித்து வருகின்றனர். இதை மறக்கவே முடியாது.

அடுத்த ஆண்டில் அதிக அளவு முன்னேறிய ஆட்டத்துடன் நாங்கள் வருவோம். நீங்கள் (ரசிகர்கள்) விரும்பிய முடிவுகளை நாங்கள் தரு

வோம். அதிக அளவில் ஸ்டேடியத்துக்கு வந்து உற்சாகமளித்த ரசிகர்களுக்கு நன்றி. ஐபிஎல் போட்டியிலேயே சிறந்த ரசிகர்கள் நீங்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close