[X] Close

சிஎஸ்கேவின் தொடர் வெற்றிக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம்: தோனி


dhoni-about-csk-dressing-room-environment

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 May, 2018 12:39 pm
  • அ+ அ-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதற்கு ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலே காரணம் என தோனி கூறியுள்ளார். 

2 வருட தடைக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சிஎஸ்கே அணி, செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் ஹைதரபாத் அணிக்கு எதிராக பரபரப்பான வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

இது குறித்து பேசிய தோனி, "கடந்த 10 சீஸன்களாக நாங்கள் சிறந்த அணியாக இருந்திருக்கிறோம். ட்ரெஸ்ஸிங் ரூம் சூழல் இதற்கு முக்கியக் காரணம். வீரர்கள், அணி ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படி இயங்க முடியாது. சூழல் சரியில்லை என்றால் வீரர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது. ஆனால் எப்படியோ நாங்கள் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்துள்ளோம்" என்றார்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதைத் தொடர்ந்து பிராவோ ட்ரெஸ்ஸிங் ரூமில் நடனமாடி கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

டூ ப்ளெஸ்ஸியின் பேட்டிங் குறித்து பேசிய தோனி, "அவரது ஆட்டத்தை பார்த்தீர்களென்றால் ஏன் அனுபவம் முக்கியம் என்பது புரியும். நிறைய போட்டிகளில், ஆடும் அணியில் இல்லாமல் போனாலும் நமது மனதை சரியாக பயிற்சி செய்து கொள்ள வேண்டும். இங்குதான் அனுபவம் தேவைப்படுகிறது. உங்கள் பங்கு என்ன என்பதை மனதளவில் திட்டமிட்டு அதை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் டூ ப்ளெஸ்ஸி அற்புதமாக செயல்பட்டுள்ளார்" என்றார்.

"நாங்கள் தோற்றிருந்தால் எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஹைதராபாத் அணியினர் அற்புதமாக பந்துவீசினர். புவனேஸ்வர் சிறப்பாக வீசினார், ரஷித் அவருக்கு நல்ல ஆதரவு தந்தார். நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இன்னும் கூடுதல் முயற்சியை போட வேண்டியிருந்தது. நடு ஓவர்களில் மூன்று நான்கு விக்கெட்டுகளை இழந்தால் அது அழுத்தம் தான். இந்த மாதிரியான போட்டியை வெல்வது நல்லது. அதை விட முக்கியம், எப்படியெல்லாம் இன்னும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்து கொள்வது.

எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசுபவர்கள். தொடரின் ஆரம்பத்திலிருந்தே நான் வெவ்வேறு வீரர்களை வெவ்வேறு நிலையில் பந்து வீச பயன்படுத்தி பரிசோதித்து வந்தேன். தொடர்ந்து இப்படி பரிசோதிக்கும் போது தான் யார், எந்த நேரத்தில், எப்படி வீசுவார்கள் என்பது தெரியும். அது சில சமயம் கை கொடுக்காமலும் போகலாம்" என்று தோனி பேசியுள்ளார். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close