[X] Close

வாழ்வா சாவா ஆட்டத்தில் இன்று மும்பையுடன் மோதுகிறது கொல்கத்தா அணி


  • kamadenu
  • Posted: 05 May, 2019 08:05 am
  • அ+ அ-

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இது கொல்கத்தா அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

மும்பை அணி ஏற்கெனவே பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தைப் பெற்றிருக்கும் மும்பை அணி,இந்த லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும்.

ரோஹித் சர்மா, குயின்டன் டி காக்,சூர்யகுமார் யாதவ், கிருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, எவின் லீவிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும் பும்ரா, ராகுல் ஷகார், ஹர்திக் பாண்டியா, பொலார்டு, லசித்மலிங்கா ஆகியோர் பவுலிங்கிலும் மும்பை அணிக்கு பலமாக உள்ளனர்.

16 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை, இந்த லீக் போட்டியில் வெற்றி பெற்று தனது புள்ளிக் கணக்கை 18-ஆக உயர்த்திக்கொள்ள முழுமூச்சுடன் களமிறங்கும்.

அதே நேரத்தில் கொல்கத்தா அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே-ஆப்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இது முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

தற்போது புள்ளிகள் பட்டியலில் ஹைதராபாத் அணி 4-வது இடத்திலும், கொல்கத்தா அணி 5-வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன் விகிதத்தில் ஹைதராபாத் அணி முன்னிலையில் உள்ளது.

பஞ்சாபுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்ஸல், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா ஆகியோர் அபாரமாக விளையாடினர். அதேபோன்ற ஆட்டம் அவர்களிடமிருந்து இன்றும் வெளிப்படக்கூடும்.

பவுலிங்கில் சுனில் நரைன், பியுஷ் சாவ்லா, சந்தீப் வாரியர், ஹாரி கர்னி, ரஸ்ஸல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

சிஎஸ்கே-பஞ்சாப் மோதல்இன்று மாலை பஞ்சாபின் மொஹாலியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.

பிளே-ஆப் சுற்றுக்கு சென்னை ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. இருப்பினும் இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று அதிக புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைக்க சென்னை அணி முனைப்பு காட்டுகிறது.

தோனி, ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், டூ பிளெசிஸ் ஆகியோர் மீண்டும் அதிக ரன் குவிக்க முனைப்பு காட்டுவர். அதைப் போல பவுலிங்கில் ஜடேஜா, இம்ரன் தகிர், தீபக் ஷகார், ஹர்பஜன் சிங் ஆகியோர் மீண்டும் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் பிளே-ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 7-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணிக்கு இது ஒரு சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

அணி விவரம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுப்மான் கில், ஆந்த்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், நிகில் யாக், ஜோ டென்லி, ஸ்ரீகாந்த் முன்டே, நித்திஷ் ராணா, சந்தீப் வாரியர், பிரஷித் கிருஷ்ணா, லூக்கி பெர்குசன், ஹாரி குர்னே, கே.சி.கரியப்பா, யாரா பிரித்விராஜ்.

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், எவீன் லீவிஸ், ஹர்திக் பாண்டியா, கிருணால் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், லசித் மலிங்கா, மயங்க் மார்க்கண்டே, பென் கட்டிங், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் ஷகார், பங்கஜ் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சித்தேஷ் லாட், மிட்செல் மெக்லீனஹன்,அனுகுல் ராய், ரஷிக் சலாம், அன்மோல்பிரீத், பரிந்தர் சரண், ஆதித்யா தாரே, ஜெயந்த் யாதவ்.

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

இன்றைய ஆட்டங்கள்: மும்பை - கொல்கத்தா

இடம்: மும்பை

நேரம்: இரவு 8.

சிஎஸ்கே-பஞ்சாப்

இடம்: மொஹாலி

நேரம்: மாலை 4

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close