[X] Close

கல்வி உதவிக்காக ஷேவிங் செய்து கொண்ட சச்சின்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 15:31 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேசத்தில் இரு சிறுமிகள் நடத்தும் முடி திருத்தும் கடையில் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஷேவிங் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உத்தரப் பிரதேசத்தைs சேர்ந்தவர்கள்  நேகா மற்றும் ஜோதி. இவர்களது தந்தை முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் அவர் பாதிக்கப்பட, நேகாவும், ஜோதியும் அவரது தந்தையின் கடையை எடுத்து நடத்தி வருகின்றனர்.

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள துறையில் இந்த இளம்பெண்கள் தொடர்ந்து தொழில் செய்து தங்களது தந்தைக்கான மருத்துவச் செலவைப் பார்த்துக் கொண்டதுடன் தங்களது படிப்பையும் தொடர்கின்றனர்.

இந்நிலையில் இந்த இரு சிறுமிகளின் கல்வி உதவிக்காக இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ஷேவிங் செய்யும் வாய்ப்பை gillette india நிறுவனம் ஏற்பாடு செய்தது.

இதனை புகைப்படத்துடன் சச்சின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

 

dcxs.jpg 

அதில், ''இது எனக்கு முதல்முறை.  நீங்கள் இதனை அறிந்திருக்காமல் இருக்கலாம்.  நான் இதுவரை பிறரிடம் ஷேவிங் செய்து கொண்டது இல்லை. அந்த சாதனை தற்போது உடைந்துள்ளது. இந்தப் பெண்களைச் சந்தித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்'' என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close